நடிகை தேவயானி தமிழ் சினிமாவுக்கு கிடைத்த அற்புதமான நடிகைகளில் ஒருவர். குறிப்பாக குடும்பப்பாங்கான ஒரு தோற்றத்தில் ஒரு கேரக்டர் வேண்டும் என்றால் 1990களில் முதல் தேர்வாக இருந்தது தேவயானிதான். காதல் கோட்டை சூரிய வம்சம் தொடரும் நினைத்தேன் வந்தாய் நீ வருவாய் என உள்ளிட்ட பல படங்களில் தேவயானி நடிப்பு வேற லெவலில் இருந்தது.
சினிமாவில் முன்னணி நடிகையாக இருந்த போதே தேவயானி இயக்குனர் ராஜகுமாரனை காதலித்து திருமணம் செய்துக்கொண்டார். அவரது இயக்கத்தில் விண்ணுக்கும் மண்ணுக்கும் என்ற படத்தில் நடித்த போது இருவருக்கும் காதல் ஏற்பட்டது. தேவயானி தனது பெற்றோர் விருப்பத்தை மீறி ராஜகுமாரனை மணந்துக்கொண்டார். இந்த நட்சத்திர தம்பதிக்கு 2 மகள்கள் உள்ளனர்.
நடிகை தேவயானி நாயகியாக தமிழ் சினிமாவில் வலம் வந்த காலகட்டத்தில் இயக்குனராக இருந்தவர் இன்றைய நடிப்பு அரக்கன் எஸ்ஜே சூர்யா. அஜீத்குமார் நடித்த வாலி, விஜய் நடித்த குஷி படங்களை தொடர்ந்து அவர் இயக்கி நடித்த படம் நியூ. இந்த படத்தில் எஸ்ஜே சூர்யாவுக்கு அம்மா கேரக்டரில் நடிகை தேவயானி நடித்திருந்தார். முதலில் தெலுங்கிலும் பிறகு தமிழிலும் இந்த படம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.
சமீபத்தில் ஒரு நேர்காணலில் பங்கேற்ற நடிகை தேவயானி, நியூ படத்தில் நடித்தது குறித்து கூறியதாவது, நியூ படத்தில் நடிக்க என்னை எஸ்ஜே சூர்யா போனில் கேட்ட போது, ஹீரோவுக்கு அம்மாவாக அந்த கேரக்டரில் எல்லாம் இப்போது நடிக்க மாட்டேன். இன்னும் டைம் போகட்டும் என்று சொன்னேன். இல்லே, நீங்க கதை கேளுங்க, நான் கதை சொல்றேன் என்று அடுத்த 10 நிமிஷத்தில் வீட்டுக்கு வந்துட்டார்.
வீட்டு வந்த அவர் எனக்கு கதை சொல்லி இம்ப்ரஸ் பண்ணி நடிச்சு நடிச்சு காமிச்சு எல்லா சீன்களையும் என்கிட்ட சொல்லி நீங்க பண்ணுங்க, நீங்க பண்ணுங்க என்றார். சரி தெலுங்கில்தானே, நான் பண்றேன் என்று சொல்லி விட்டேன். பிறகு நியூ படத்தில் அம்மா கேரக்டரில் நடித்தேன்.
தெலுங்கில் பார்த்துவிட்டு தமிழிலும் நீங்கதான் பண்ணனும் என்று அடம் பிடித்து விட்டார். அதுதான் தெலுங்கில் பண்ணி விட்டேனே, இனி தமிழில் என்னால் பண்ண முடியாது என்று மறுத்தேன். ஆனால் அவர் நீங்கதான் பண்ணனும், நீங்கதான் பண்ணனும் என்று கேட்டுக்கொண்டே இருந்தார். அப்புறம் வேற வழியில்லாமல் பிறகு தமிழிலும் நானே அந்த கேரக்டர் பண்ணினேன் என்று நடிகை தேவயானி கூறியிருக்கிறார்.





