நடிகர் விஜய் நடித்த லியோ படம் மிகப்பெரிய வெற்றிப்படமாக பேசப்பட்டு வருகிறது. படம் ரிலீஸ் ஆன 12 நாட்களில், ரூ. 540 கோடியை வசூலித்து சாதனை புரிந்துள்ளது. படக்குழு, நேற்று முன்தினம் சென்னை இன்டோர் ஸ்டேடியத்தில் வெற்றிவிழா கொண்டாடியது குறிப்பிடத்தக்கது.
லியோ படத்தில், முக்கிய கேரக்டரில் பிக்பாஸ் ஜனனி நடித்திருந்தார். இலங்கையை சேர்ந்த ஜனனி, அங்குள்ள மீடியாக்களில் பணிபுரிந்தவர், டிவி சேனல்களில் வி ஜே வாகவும், நிகழ்ச்சி தொகுப்பாளராகவும் பல நிகழ்ச்சிகளை நடத்தி, இலங்கை மக்கள் மத்தியில் பிரபலமானார்.
குறிப்பாக டிக்டாக் இருந்த காலத்தில், இவர் ஏகப்பட்ட டிக்டாக் களை செய்து, மக்கள் மத்தியில் பெரிய வரவேற்பை பெற்றார். இதைத்தொடர்ந்து, கடந்த 2022ம் ஆண்டில், விஜய் டிவியில் பிக்பாஸ் சீசன் 6ல் கலந்துக்கொள்ளும் வாய்ப்பு கிடைத்தது. அந்நிகழ்ச்சியில் இவரது கொஞ்சுகிற அழகில் இலங்கை தமிழ், பார்வையாளர்களுக்கு வெகுவாக பிடித்துப் போய் மிக பிரபலமானார்.
அதனால் பிக்பாஸ் ஜனனி என அடைமொழியுடன் அழைக்கப்படும் அவர், லியோ படத்தில் விஜய் நடத்தும் காபி ஷாப்பில் பணிபுரியும் ஊழியராக நடித்திருப்பார். காபி ஷாப்புக்குள் நுழையும் சாண்டி மாஸ்டர் சாக்லேட் காபி கேட்டு, ஜனனியிடம் வம்பு செய்வதும், அவரை, மிஷ்கினை விஜய் சுட்டுக்கொல்லும் காட்சிக்கு பிறகுதான் படம் விறுவிறுப்பாக மாறும்.
லியோ படத்தில் நடித்தது குறித்து, சமீபத்தில் ஒரு நேர்காணலில் பேசிய ஜனனி, ஷூட்டிங் ஸ்பாட்டில் விஜய் அமைதியாக இருப்பார். ஷாட் முடிந்த பிறகு வந்து என்னுடன் சகஜமாக பேசுவார். நீங்களும் கதைக்கறீங்க என்றுதானே பேசுவீங்க என்பார். பிக்பாஸ் அப்பப்போ பார்ப்பேன், உண்மையாவே, அங்க சண்டை போட்டுக்கறாங்களா என்றும் ஆச்சரியமாக கேட்டார்.
வீட்டில் என் மனைவி, அவரது சகோதரி, அம்மா எல்லோருமே இலங்கை தமிழில் தான் பேசுவார்கள். அதுபோல், இங்கு வந்தாலும் நீங்களும் இலங்கை தமிழில்தான் பேசுகிறீர்கள் என கேலியாக விஜய் சொல்லுவார். என் மகன், ஒரு பாடல் எடுத்திருப்பதே எனக்கு தெரியாது. யூடியூப்பில் வந்தபிறகு அவனே என்னிடம் கொண்டு வந்து காட்டினான் என்றெல்லாம் என்னிடம் கூறுவார். அவரிடம் எப்படி சைலண்டாக இருக்கிறீர்கள் என்று கேட்டதற்கு, வேறு என்ன செய்வது, எதை பேசுவது என்று கூறினார். என்னை போலவே, அவருக்கும் அமைதியாக இருப்பதே பிடிக்கிறது, என்று கூறி இருக்கிறார் பிக்பாஸ் ஜனனி.





