- Advertisement -
Homeபொழுதுபோக்குதிருப்பதி ஏழுமலையான் கோவிலில் ஏமாற்றப்பட்ட ரஜினி பட நடிகை, லட்சக்கணக்கில் பணத்தை பறிகொடுத்தது எப்படி? -...

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ஏமாற்றப்பட்ட ரஜினி பட நடிகை, லட்சக்கணக்கில் பணத்தை பறிகொடுத்தது எப்படி? – போலீசில் புகார்

- Advertisement -

கடந்த 1980களில் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் நடிகை ரூபிணி. தமிழில் அன்றைய முன்னணி ஹீரோக்கள் ரஜினி கமல் விஜயகாந்த் சத்யராஜ் பிரபு மோகன் உள்ளிட்ட பலருக்கு நாயகியாக நடித்து ரசிகர்களிடம் பெரிய வரவேற்பை பெற்றார்.

குறிப்பாக மனிதன் அபூர்வ சகோதரர்கள் கேப்டன் பிரபாகரன் மூன்றெழுத்தில் என் மூச்சிருக்கும் தாய்நாடு மைக்கேல் மதன காமராஜன் என் தங்கச்சி படிச்சவ என பல படங்களில் நடித்தவர். ரஜினிகாந்துடன் ரூபிணி நடித்த மனிதன் படம் அவருக்கு பெரிய அடையாளத்தை ரசிகர்களிடம் பெற்றுத் தந்தது.

- Advertisement -

ஒரு கட்டத்தில் திருமணமாகி கணவர், பிள்ளைகள் என குடும்பத்துடன் மும்பையில் ரூபிணி செட்டிலாகி விட்டார். இந்நிலையில் ஆந்திராவில் உள்ள திருப்பதி ஏழுமலையான் கோவிலில் கூட்டமில்லாமல் தன் குடும்பத்துடன் வந்து தரிசனம் செய்ய நடிகை ரூபிணி விரும்பி இருக்கிறார். தமிழ்நாட்டை சேர்ந்த சரவணன் என்பவர் இதற்கு உதவுவதாக ரூபிணியை தொடர்பு கொண்டிருக்கிறார்.

சினிமா நடிகர் நடிகைகளுடன் இருக்கும் பல புகைப்படங்களை நடிகை ரூபிணியிடம் காட்டிய அவர், கூட்டமே இல்லாமல் ஒரு மணி நேரம் வரை திருப்பதி சுவாமியை தரிசனம் செய்ய ஏற்பாடு செய்வதாகவும் அதற்காக ரூ. 77 ஆயிரம் தரிசன கட்டணம் மற்றும் தங்கும் விடுதி செலவு உட்பட ஒன்றரை லட்சம் ரூபாய் வரை ரூபிணியிடம் வாங்கியிருக்கிறார்.

- Advertisement -

இதையடுத்து நடிகை ரூபிணி ஏழுமலையான் கோவிலில் சிறப்பு தரிசனம் செய்வதற்காக, தன்னிடம் ஒன்றரை லட்சம் வாங்கிய நபர் சரவணனை தொடர்பு கொண்ட போது, அவர் பலமுறை அழைத்தும் போனை எடுக்கவில்லை. பிறகு விசாரித்த போது அப்படி எல்லாம் பிற நபர்கள் மூலம் திருப்பதி கோவிலில் சிறப்பு தரிசனம் செய்ய முடியாது என்ற தகவலும் ரூபிணிக்கு கிடைத்திருக்கிறது.

அதன்பிறகுதான் நடிகை ரூபிணிக்கு தான் ஏமாற்றப்பட்டது தெரிய வந்துள்ளது. தன்னிடம் கோவிலில் சிறப்பு தரிசனம் செய்ய ஏற்பாடு செய்து தருவதாக சொல்லி ஏமாற்றி ஒன்றரை லட்சம் ரூபாய் மோசடி செய்த நபர் மீது தமிழ்நாடு போலீஸ் மற்றும் ஆந்திர போலீஸில் நடிகை ரூபிணி புகார் செய்திருக்கிறார் என்ற தகவல் தற்போது வெளியாகி உள்ளது.

- Advertisement -

சற்று முன்