இயக்குனர் செல்வராகவன் இயக்கத்தில் நடிகர் தனுஷ் நடிகைகள் சினேகா சோனியா அகர்வால் பாலாசிங் அழகம் பெருமாள் மூணார் ரமேஷ் உள்ளிட்டோர் நடித்த இந்த படம் கடந்த 2006ம் ஆண்டில் வெளியானது. இதில் கொக்கி குமார் கேரக்டரில் தனுஷூம் விலைமாது கேரக்டரில் நடிகை சினேகாவும் நடித்திருந்தனர்.
இந்த படம் உருவான காலகட்டத்தில் நடிகை சினேகா முன்னணி நாயகியாக இருந்தார். வேகமாக வளர்ந்து கொண்டிருந்த நிலையில் இப்படி ஒரு கேரக்டரில் அவர் துணிச்சலாக நடித்தது ரசிகர்கள் மத்தியில் பெரிய பாராட்டை பெற்றது. மேலும் இந்த படத்தில் ஒரு காட்சியில் அரசியல்வாதியான பாலாசிங், நடிகை சினேகாவை அடிப்பது போல காட்சி இருந்தது.
அப்போது சினேகாவை அவர் தாறுமாறாக அறைவது போலவும் கைகளால் அடிப்பது போலவும் ஒரு கட்டத்தில் கீழே விழுந்திருக்கும் அவரை வயிற்றில் எட்டி உதைப்பது போலவும் அந்த காட்சி இருக்கும். அந்த காட்சியில் ஆவேசமாக பாலாசிங் சினேகாவை தாக்குவது போலவும் அடி தாங்க முடியாமல் சினேகா அலறி அழுவது போலவும் அந்த காட்சி எடுக்கப்பட்டு இருந்தது.
இந்நிலையில் சமீபத்தில் ஒரு நேர்காணலில் பேசிய நடிகை சினேகா கூறியதாவது, அந்த காட்சியை எடுக்கும் போது அவர் நிஜமாகவே என்னை உதைத்தார். இன்னும் ரியாக்சன் வேண்டும், இன்னும் பெட்டராக வேண்டும் பெட்டராக வேண்டும்என்று டைரக்டர் செல்வா சார் சொன்னதால் அவர் ஆவேசமாக என்னை உண்மையிலேயே உதைத்து விட்டார். எனக்கு வலித்தது.
அந்த காட்சியை எடுத்து முடித்ததும் நான் கேரவனுக்குள் போய் அழுதேன். இந்த விஷயம் எப்படியோ இயக்குனர் செல்வராகவனுக்கு தெரிந்து விட்டது. அவளுக்கு வலிச்சிருச்சு போல இருக்கு வயித்துல அடி பட்டுருச்சு போல இருக்குதுன்னு யாரோ சொல்லி இருக்காங்க. அப்போது கேரவனுக்கு வந்த அவர், என்னம்மா நிஜமாவே உதைச்சுட்டாரா? அடிபட்டு விட்டதா? என்று கேட்டார்.
ஆமா சார் உண்மையிலேயே அடிபட்டுவிட்டது என்று சொன்னேன். நீங்க ரிலாக்ஸ் பண்ணுங்க, அரைமணி நேரம் கழிச்சு வாங்கன்னு சொல்லிட்டு போயிட்டார். அப்படி எடுக்கப்பட்ட ஒரு காட்சி அது என்று அந்த நேர்காணலில் நடிகை சினேகா கூறியிருக்கிறார். புதுப்பேட்டை படம் நடிகை சினேகாவுக்கு நல்ல அடையாளத்தை தந்த படங்களில் ஒன்றாக இருந்தது குறிப்பிடத்தக்கது.





