- Advertisement -
Homeபொழுதுபோக்குஎனக்கு சௌகார் ஜானகி என்று எப்படி பெயர் வந்தது? - நேர்காணல் ஒன்றில் சீக்ரெட்டை போட்டுடைத்த...

எனக்கு சௌகார் ஜானகி என்று எப்படி பெயர் வந்தது? – நேர்காணல் ஒன்றில் சீக்ரெட்டை போட்டுடைத்த எதிர்நீச்சல் பட்டு மாமி!

- Advertisement -

தமிழ் தெலுங்கு மலையாளம் கன்னடம் என 400க்கும் மேற்பட்ட படங்களில் நடித்தவர் பழம்பெரும் நடிகை சௌகார் ஜானகி. குறிப்பாக தமிழில் அவர் பல படங்களில் நடித்து ரசிகர்களின் மனம் கவர்ந்தவர். எதிர்நீச்சல் புதிய பறவை பாமா விஜயம் பாலும் பழமும் உயர்ந்த மனிதன் பார் மகளே பார் இரு கோடுகள் துணைவன் உள்ளிட்ட ஏராளமான படங்களில் நடித்திருக்கிறார்.

குறிப்பாக கே பாலசந்தர் இயக்கத்தில் நடிகர் நாகேஷ் கதையின் நாயகனாக நடித்த எதிர்நீச்சல் படத்தில் சௌகார் ஜானகி பட்டு மாமி என்ற கேரக்டரில் நடித்திருந்தார். அவரது கணவராக நடிகர் ஸ்ரீகாந்த் நடித்திருப்பார். தீவிர சினிமா ரசிகையான பட்டு மாமி கேரக்டரில் சௌகார் ஜானகி அசத்தலான நடிப்பை வெளிப்படுத்தி இருப்பார்.

- Advertisement -

இந்த படத்தில் இடம்பெற்ற அடுத்தாத்து அம்புஜத்தை பார்த்தேளா அவர் ஆத்துக்காரர் கொஞ்சறதை கேட்டேளா என்ற பாடலும் அந்த பாடல் காட்சியில் ஸ்ரீகாந்த் – சௌகார் ஜானகி நடிப்பும் பெரிய அளவில் வரவேற்பு பாராட்டை பெற்றது. அதே போல் புதிய பறவை தில்லுமுல்லு போன்ற பல படங்களில் செளகார் ஜானகி அற்புதமாக நடித்திருந்தார்.

இந்நிலையில் பல ஆண்டுகளுக்கு முன்பு ஒரு நேர்காணலில் பங்கேற்ற நடிகை செளகார் ஜானகி தனக்கு சௌகார் ஜானகி என்று பெயர் வந்தது எப்படி என்பது குறித்து விளக்கம் தந்திருக்கிறார். அப்போது அவர் கூறியதாவது, என்னுடைய பெயரில் சௌகார் என்ற பெயர் எப்படி ஒட்டிக்கொண்டது என்று தெரிந்தால் சிரிப்பாக இருக்கும்.

- Advertisement -

எம்ஜிஆர் அவர்களின் மனைவி விஎன் ஜானகி அப்போது படங்களில் பிஸியாக நடித்துக்கொண்டு இருந்தார். அப்போது அந்த படத்தில் ஜானகி நடிக்கிறார் ஜானகி நடிக்கிறார் என்கிறார்களே? அது யார் விஎன் ஜானகியா என்று சந்தேகமாக கேட்டிருக்கிறார்கள்.

அட அவங்க இல்லைய்யா, சௌகார் என்கிற படத்தில் நடித்ததே அந்த பொண்ணு என்றனர். அதாவது விஎன் ஜானகிக்கும் எனக்கும் வேறுபாடு காட்டவே சௌகார் என்ற படத்தில் நடித்தவர் என்பதால் என்னுடைய பெயர் சௌகார் ஜானகி என்றாகி விட்டது. பெயரை வித்யாசப்படுத்தி காட்டவே அந்த பெயர் பொதுமக்களிடம் இருந்து வந்தது என்று அந்த நேர்காணலில் சௌகார் ஜானகி கூறியிருக்கிறார்.

- Advertisement -

சற்று முன்