- Advertisement -
Homeபொழுதுபோக்குஎன்னை விமர்சிப்பார்கள் என்று தெரிந்துதான் அந்த கேரக்டரில் நான் நடித்திருக்கிறேன் - தக்லைஃப் படம் குறித்து...

என்னை விமர்சிப்பார்கள் என்று தெரிந்துதான் அந்த கேரக்டரில் நான் நடித்திருக்கிறேன் – தக்லைஃப் படம் குறித்து நடிகை திரிஷா ஓபன்டாக்!

- Advertisement -

நடிகை திரிஷா முன்னணி நாயகியாக தமிழில் வலம் வருகிறார். தெலுங்கு மலையாளம் மொழி படங்களிலும் பிஸியாக நடித்து வருகிறார். பொன்னியின் செல்வன் படத்தில் குந்தவை கேரக்டரில் நடித்த பிறகு தொடர்ந்து பல படங்களில் திரிஷா நடித்து வருகிறார். இப்போது ஆர்ஜே பாலாஜி இயக்கத்தில் நடிகர் சூர்யா நடித்து வரும் வேட்டை கருப்பு படத்தில் திரிஷா நடித்து வருகிறார்.

பொன்னியின் செல்வன் படத்துக்கு பிறகு விஜயுடன் லியோ படத்தில் நடித்த திரிஷா அடுத்து தி கோட் படத்தில் ஒரு பாடலுக்கு விஜயுடன் ஆடினார். அஜீத்குமாருடன் விடாமுயற்சி குட் பேட் அக்லி படங்களில் நடித்த அவர் மலையாளத்தில் ஐடென்டி என்ற படத்தில் நடித்தார். தெலுங்கில் சிரஞ்சீவியுடன் விஸ்வம்பரா என்ற படத்தில் நடித்துள்ளார். இனி அடுத்து வர உள்ள தக்லைஃப் படத்திலும் திரிஷா நடித்திருக்கிறார்.

- Advertisement -

இந்த படத்தில் நடிகர் கமலுக்கு அவர் ரகசிய காதலியாக நடித்திருப்பதாக கூறப்படுகிறது. ஏற்கனவே மன்மதன் அம்பு படத்தில் கமலுடன் திரிஷா நடித்திருந்தார். ஆனால் அது கடைசியில்தான் இருவரும் காதலர்களாக மாறுவார்கள், அதுவரை மாதவன் திரிஷா தான் காதலிப்பார்கள்/ தக்லைஃப் கமல் திரிஷா இணைந்து நடித்துள்ள 2வது படமாகும்.

தக்லைஃப் படத்தில் திரிஷா கேரக்டர் குறித்து ஒரு நேர்காணலில் பேசிய இயக்குனர் மணிரத்னம் கூறுகையில், இந்தப் படத்தில் திரிஷாவுக்கு வித்யாசமான கேரக்டர். குறிப்பாக பொன்னியின் செல்வன் படத்தில் இருந்து ஒரு ஆப்போசிட்டான வேடத்தில் திரிஷா நடித்துள்ளார்.

- Advertisement -

தக்லைஃப் படத்தில் திரிஷாவின் கேரக்டர் குறித்து முதலில் அவரிடம் சொன்னபோது, அது அவரை இம்ப்ரஸ் பண்ணியது. அதனால் இந்த வேடத்தை மிகவும் பிடித்து போய் நடித்து இருக்கிறார். என்று மணிரத்னம் கூறி இருக்கிறார். இதுகுறித்து ஒரு நேர்காணலில் பேசிய நடிகை திரிஷா கூறுகையில், இந்த படத்தில் எங்களது ஜோடி திரையில் மாயாஜாலமாக இருக்கும் என்றாலும் எனது கேரக்டரை சிலர் விமர்சிக்கவும் செய்வார்கள்.

இதையெல்லாம் முன்கூட்டியே தெரிந்து கொண்டு தான் இந்த கேரக்டரில் நடிக்க நான் ஒப்பந்தம் ஆனேன் என்று திரிஷா வெளிப்படையாக கூறியிருக்கிறார். மேலும் தக்லைஃப் படத்துக்காக கமலும் மணிரத்னமும் எவ்வளவு புரிதலுடன் இணைந்து செயல்பட்டார்கள் என்பதை அனைத்து நடிகர்களும் பார்க்க வேண்டும். அது கூட ஒரு மாயாஜாலம் போலத்தான் இருந்தது என்றும் நடிகை திரிஷா கூறியிருக்கிறார்.

- Advertisement -

சற்று முன்