- Advertisement -
Homeபொழுதுபோக்கு3 பிஹெச்கே படம் எல்லாருக்கும் கனெக்ட் ஆகும்… ஏன்னா எனக்கே அப்படி ஒரு அனுபவம் இருக்கு...

3 பிஹெச்கே படம் எல்லாருக்கும் கனெக்ட் ஆகும்… ஏன்னா எனக்கே அப்படி ஒரு அனுபவம் இருக்கு – பிரபலம் சொன்ன முக்கிய தகவல்!

- Advertisement -

நடிகர் சித்தார்த் சரத்குமார் தேவயானி நடிப்பில் நாளை 3 பிஹெச்கே திரைப்படம் ரிலீஸாக உள்ளது. இந்த படத்தை ஸ்ரீ கணேஷ் டைரக்ட் செய்திருக்கிறார். நடுத்தர மக்களின் கனவு இல்லம்தான் இந்த படத்தின் கதைக்களமாக உள்ளது. இந்த படத்தின் டிரெய்லர் சமீபத்தில் வெளியாகி பெரிய அளவில் வரவேற்பை பெற்றுள்ளது.

இந்த படம் குறித்து சமீபத்தில் ஒரு நிகழ்ச்சியில் பேசிய ஆங்கர் ஆவுடையப்பன் கூறியதாவது, 3 பி ஹெச் கே படம் என்னை மட்டுமல்ல, எல்லாரையும் கனெக்ட் பண்ணும் படமாக இருக்கும் என்று நம்புகிறேன் நான். ஜர்னலிஸ்ட்டா இருந்தப்போ ஒருமுறை தூத்துக்குடி போற வழியில மீனாட்சிபுரம் என்று ஒரு ஊர் இருக்கு. அந்த ஊர்ல வந்து யாருமே கிடையாது. அந்த ஊரே பார்த்தால் பூராவும் காடாக இருக்கும்.

- Advertisement -

ஒரே ஒரு ஆள் மட்டும் அந்த ஊரில் வாழ்கிறார் என்று எனக்கு தகவல் வந்தது. அதனால் ஒருமுறை அவரை நேரில் சென்று பார்க்கலாம் என்று நான் அங்கு போனேன். அப்போ அங்க எல்லா வீடுகளும் இடிஞ்சு கிடந்தது. பழைய வீடுகளாக இருக்குது. அங்கு யாருமே இல்லை.

நாங்க போன உடனே அவருக்கு அவ்வளவு சந்தோஷம். ஏன்னா யோசிச்சு பாருங்க. அந்த ஊர்ல யாருமே கிடையாது. மனிதர்களை பார்க்கவே முடியாது. அப்போ ஒரு மனிதனை பார்த்தால் அவர் எவ்வளவு சந்தோஷமாக பேசுவார். அவரால் நடக்க முடியலே. ரொம்பவும் வயது முதிர்ந்து விட்டது.

- Advertisement -

அப்போ நான் அவர்கிட்ட கேட்டேன். என்னங்க ஊர்ல யாருமே இல்லே. நீங்க மட்டும் இருக்கீங்க என்றேன். பல வருஷத்துக்கு முன்னாடியே இந்த ஊர்ல தண்ணீர் பிரச்னை இருக்குதுன்னு எல்லாரும் ஊரை காலி பண்ணிட்டு போயிட்டாங்க. நான் மட்டும் போகல. என் மனைவி கொஞ்ச வருஷத்துக்கு முன்னாடி இறந்துட்டா.

நான் மட்டும்தான் இந்த வீட்ல இருக்கேன். எனக்கு ரொம்ப தனிமையா தான் இருக்கு. ஆனாலும் என்னால இந்த வீட்டை விட்டு போக முடியலே. ஏன்னா இந்த வீட்டை நான்தான் கட்டினேன். எனக்கு இந்த வீடு அவ்வளவு பிடிச்சிருக்கு. எனக்கு இந்த வீட்ல அவ்ளோ எமோசனல் இருக்குன்னு அவர் சொல்றார். கடைசி வரை அந்த வீட்டில் அவர் வாழ்ந்து மறைந்தார். அப்படி ஒவ்வொரு மனிதனுக்கும் வீடு என்பது பெரிய உணர்வு. அதை இந்த படம் வெளிப்படுத்தி உள்ளது என்று அவர் கூறியிருக்கிறார். அதனால் இந்த படம் பெரிய வெற்றியை பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

- Advertisement -

சற்று முன்