நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில், பொங்கல் பண்டிகைக்கு வெளியான படம் அயலான். இன்று நேற்று நாளை இயக்குனர் ரவிக்குமார் இயக்கிய இந்த படம் பெரிய எதிர்பார்ப்பில் இருந்தது. ஏலியன் கதை என்பதால் படம் வேற லெவலில் இருக்கும். சிவகார்த்திகேயனுக்கு திருப்புமுனை படமாக அமையும் எனவும் எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால் அயலான் படம் ரசிகர்களை திருப்திபடுத்தவில்லை. இன்னும் படத்தில் நிறைய சுவாரசியங்களை சேர்த்திருக்கலாம் என்பது ரசிகர்களின் ஏமாற்றமாக இருந்தது. அதனால் இந்த படம் பிளாப் ஆனது. இதையடுத்து தற்போது ஏஆர் முருகதாஸ் இயக்கத்தில் புதிய படம் ஒன்றில் சிவகார்த்திகேயன் நடித்து வருகிறார். இந்த படத்தில் நடிகை ருக்மணி வசந்த் ஜோடியாக நடிக்கிறார்.
இயக்குனர் ஏஆர் முருகதாஸ், கடந்த 5 ஆண்டுகளுக்கு முன் சல்மான்கானை சந்தித்து கதை சொல்லி இருந்தார். அந்த கதைக்கு சல்மான்கான் ஓகே சொல்லிவிட்டார். வரும் ஜூன் அல்லது ஜூலை மாதத்தில் சல்மான்கான் படப்பிடிப்பு துவங்க அனுமதி தந்துவிட்டார். அந்த படத்துக்கான ப்ரீ புரடக்சன் பணியை துவக்கவும் ஏஆர் முருகதாஸிடம் கூறிவிட்டனர்.
ஆனால் இப்போது சிவகார்த்திகேயன் படப்பிடிப்பில் ஏஆர் முருகதாஸ் பிஸியாக இருக்கிறார். எனவே வருகிற ஜூன் மாதத்துக்குள் இந்த படத்தை முடித்துவிட்டு, சல்மான்கான் படம் சார்ந்த பணிகளில் ஏஆர் முருகதாஸ் கவனம் செலுத்த வேண்டிய நெருக்கடியில் இருக்கிறார். அதனால் சிவகார்த்திகேயன் படத்தை வேகவேகமாக அடுத்தடுத்த கட்ட படப்பிடிப்பை நடத்தி வருகிறார்.
இதற்கிடையே ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனம் தயாரித்த அமரன் படத்தில் சிவகார்த்திகேயன் நடித்த நிலையில், இன்னும் 25 நாட்கள் வரை, அவர் நடிக்க வேண்டியுள்ளது. சிவகார்த்திகேயன் அந்த போர்ஷனை முடித்தால் மட்டுமே, அமரன் படத்தை வெளியிட முடியும். அவர் நடிக்க வேண்டிய காட்சிகளுக்காக படம் பெண்டிங்கில் இருக்கிறது.
அதனால், ஏஆர் முருகதாஸிடம் 25 நாட்கள் இடையில் கால அவகாசம் வேண்டும் என சிவகார்த்திகேயன் கேட்டிருக்கிறார். ஆனால், ஏற்கனவே சல்மான்கான் படப்பிடிப்பை ஜூன் மாதம் துவங்க வேண்டி இருப்பதால், ஒரே ஷெட்யூலில் படத்தை முடித்தாக வேண்டும். அதனால் 25 நாட்கள் எல்லாம் கேப் விட முடியாது. கண்டிப்பாக நீங்கள் நடித்தே ஆக வேண்டும் என்று கண்டிசன் போட்டுவிட்டார். வேறு வழியின்றி சிவகார்த்திகேயனும் ஒத்துக்கொண்டார். ஆனால், கமலிடம் இப்படி வசமாக மாட்டிக்கொண்டோமே என தனிமையில் புலம்புகிறார் சிவகார்த்திகேயன்.





