- Advertisement -
Homeபொழுதுபோக்குசூர்யா இருக்கிற ஏரியாவுக்கு போய்டாதீங்க, எச்சரித்த வணங்கான் பட டைரக்டர் பாலா -இப்படி ஒரு பிரச்னை...

சூர்யா இருக்கிற ஏரியாவுக்கு போய்டாதீங்க, எச்சரித்த வணங்கான் பட டைரக்டர் பாலா -இப்படி ஒரு பிரச்னை இதுல இருக்கா ப்ரோ?

- Advertisement -

நடிகர் சூர்யாவுக்கு, தமிழ் சினிமாவில் மிக முக்கியமான இடத்தை ஏற்படுத்தி கொடுத்தவர் டைரக்டர் பாலா. அவரது இயக்கத்தில் சூர்யா நடித்த பிறகுதான், தமிழ் ரசிகர்களிடம் மிகப்பெரிய அடையாளம் அவருக்கு கிடைத்தது. நந்தா, பிதாமகன் இரண்டுமே சூர்யாவுக்கு ஹீரோ அந்தஸ்தை தேடித் தந்தது.

தொடர்ந்து சிங்கம், வேல், கஜினி, ஜெய்பீம், வாரணம் ஆயிரம், சில்லுன்னு ஒரு காதல் போன்ற படங்களில் நடித்து இன்று டாப் ஸ்டார்களில் ஒருவராக சூர்யா, முன்னணி ஹீரோவாக இருந்து வருகிறார். நடிகை ஜோதிகாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவரது தம்பி கார்த்தியும், முன்னணி நடிகராக தமிழ் சினிமாவில் தனி முத்திரை பதித்து வருகிறார்.

- Advertisement -

இந்நிலையில், டைரக்டர் பாலா இயக்கத்தில் வணங்கான் என்ற படத்தில் நடிக்க சூர்யா ஒப்பந்தம் ஆனார். ஆனால் ஒரு கட்டத்தில் சூர்யாவுக்கும், டைரக்டர் பாலாவுக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்ட நிலையில், அந்த படத்தில் இருந்து சூர்யா விலகி விட்டார். அதையடுத்து, நடிகர் அருண் விஜய் வணங்கான் படத்தில் நடித்தார். விரைவில் வணங்கான் திரைக்கு வர இருக்கிறது.

சமீபத்தில், வணங்கான் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது. இதில் அருண் விஜய் ஒரு கையில் பெரியார் சிலை, மற்றொரு கையில் விநாயகர் சிலையுடன் தண்ணீருக்குள் இருப்பது போன்ற அந்த பர்ஸ்ட் லுக் பெரிய அளவில் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து, பெரிய அளவில் பேசப்பட்டது.

- Advertisement -

இந்த போஸ்டர்களை சென்னை முழுவதும் ஒட்டுவதற்கு என்றே சென்னையில் நந்தக்குமார் என்பவர் ஏஜண்ட் போல செயல்படுகிறார். அவரிடம் பேசிய டைரக்டர் பாலா, இந்த வணங்கான் பர்ஸ்ட் லுக் போஸ்டரை, நடிகர் சூர்யா வீடு இருக்கும் பகுதியில் ஒட்ட வேண்டாம். அதனால், அவருக்கு ஏதும் சங்கடம் ஏற்படலாம். அதை தவிர்த்து விடுங்கள் என்று கூறி இருக்கிறார்.

தன்னுடைய படங்களில் நடித்த ஹீரோ சூர்யா, இப்போது சற்று கருத்து வேறுபாடு காரணமாக தன்னுடைய படத்தில் நடிக்கவில்லை. தன் அன்புக்கு. நட்புக்குரிய மனிதர் சூர்யா என்ற முறையில், அவரை சங்கடப்படுத்தி விடக் கூடாது என்ற டைரக்டர் பாலாவின் இந்த பெருந்தன்மையான குணத்தை, சமூக வலைதளங்களில் பலரும் பாராட்டி வருகின்றனர். இந்த நல்ல குணமே விரைவில் பாலா – சூர்யா இருவரை பழையபடி இணைத்துவிடும் என்கின்றனர் ரசிகர்கள்.

- Advertisement -

சற்று முன்