- Advertisement -
Homeபொழுதுபோக்குஎஸ்ஜே சூர்யா பகத் பாசில் நடிக்க இருந்த மலையாள படம் டிராப், அந்த படம் பண்ண...

எஸ்ஜே சூர்யா பகத் பாசில் நடிக்க இருந்த மலையாள படம் டிராப், அந்த படம் பண்ண முடியலே – டைரக்டர் தந்த ஓபன் ஸ்டேட்மென்ட்!

- Advertisement -

தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமாகி இன்று நடிப்பு அரக்கன் என்ற அடைமொழியுடன் வலம் வருபவர் எஸ்ஜே சூர்யா. தமிழ் மட்டுமின்றி தெலுங்கு இந்தி என அவருக்கு ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பு கிடைத்து வருகிறது. அதே போல் மலையாளத்தில் இருந்து தமிழுக்கு வந்த நடிகர் பகத் பாசில் நடிப்பில் சூரனாக இருந்து ரசிகர்களை கவர்ந்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

மலையாளத்தில் சில கடந்த சில ஆண்டுகளுக்கு முன் வெளியான படம் ஜெய ஜெய ஜெய ஜெய ஜெய ஹே. இந்த படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. இந்த படத்தை இயக்குனர் விபின் தாஸ் டைரக்ட் செய்து இருந்தார். ரசிகர்களுக்கு ஓரளவு பரிச்சயமான நட்சத்திரங்கள் இந்த படத்தில் நடித்திருந்தனர்.

- Advertisement -

ஜெய ஜெய ஜெய ஜெய ஜெய ஹே படம் சொன்ன விஷயத்திற்காகவும் அதை கையாளப்பட்டிருந்த விதமும் கதைக்களமும் திரைக்கதை ஓட்டமும் ரசிகர்களின் மத்தியில் பெரிய பாராட்டை பெற்றது. இந்த படம் மிகப்பெரிய அளவில் வசூல் சாதனையும் செய்தது. இந்த படத்தைப் பார்த்த பாலிவுட் நடிகர் அமீர்ஜான் இயக்குனர் விபின் தாஸை நேரில் அழைத்து பாராட்டியதுடன் இந்த படத்தை இந்தியில் ரீமேக் செய்யவும் சில முயற்சிகள் எடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஜெய ஜெய ஜெய ஜெய ஜெய ஹே படத்தை தொடர்ந்து நடிகர் பிருத்விராஜ் நடித்த குருவாயூர் அம்பல நடையில் என்ற படத்தை விபின் தாஸ் இயக்கியிருந்தார். இந்த படத்தில் நடிகர் மற்றும் இயக்குனர் பசில் ஜோசப் முக்கிய கேரக்டரில் நடித்திருந்தார். இந்தப் படமும் ரசிகர்களின் மனம் கவர்ந்த வெற்றி படமாக அமைந்தது.

- Advertisement -

இதையடுத்து மீண்டும் நடிகர் பிருத்விராஜ் நாயகனாக நடித்த சந்தோஷ் டிராபி என்கிற படத்தை விபின்தாஸ் இயக்க உள்ளார். இதற்கிடையில் மிகப்பெரிய நட்சத்திர நடிகர்கள் நடிக்க விபின்தாஸ் இயக்குவதாக இருந்த 2 படங்கள் டிராப் ஆகிவிட்டது. அது குறித்து சமீபத்தில் நேர்காணல் ஒன்றில் பங்கேற்ற விபின்தாஸ் வெளிப்படையாக பேசியிருக்கிறார்.

நடிகர் பகத் பாசில் எஸ்ஜே சூர்யா இணைந்து நடிக்கும் விதமாக ஒரு கதையை உருவாக்கியிருந்தேன். இருவருக்கும் அந்த கதை பிடித்திருந்தது. ஆனாலும் கூட கால்ஷீட் மற்றும் பட்ஜெட் காரணமாக அந்த படம் டிராப் ஆகிவிட்டது என்று விபின்தாஸ் கூறியுள்ளார். அத்துடன் மலையாள நடிகர் மோகன்லாலுக்கு கதை சொல்லும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது. ஆனால் நான் சொன்ன கதை அவரை பெரிய அளவில் ஈர்க்கவில்லை என்பதால் அந்தப் படத்தை இயக்கும் வாய்ப்பும் கைவிட்டுப் போனதாக இயக்குனர் விபின்தாஸ் ஓபனாக கூறியிருக்கிறார்.

- Advertisement -

சற்று முன்