தமிழ் சினிமாவில் பல வெற்றிப் படங்களை கொடுத்தவர் மணிரத்னம். இப்போது அவரது இயக்கத்தில் அடுத்ததாக கமல் சிம்பு திரிஷா நடித்த தக்லைஃப் படம் வெளிவர உள்ளது. இந்த படத்தில் இருந்து ஜிங்குச்சா என்ற பர்ஸ்ட் சிங்கிள் வெளியான நிலையில், செகன்ட் சிங்கிள் விரைவில் வெளியாக உள்ளது.
மணிரத்னம் இயக்கிய பல படங்களில் ஒளிப்பதிவாளராக பணிசெய்தவர் ராஜீவ் மேனன். அவர் டைரக்ட் செய்த படம் கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் பெரிய வரவேற்பை பெற்றது. இந்த படத்தில் மம்முட்டி அஜீத்குமார் ஐஸ்வர்யா ராய் தபு உள்ளிட்டோர் நடித்திருந்தனர். இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் விடுதலை படத்தில் தலைமை செயலாளர் கேரக்டரில் நடித்திருந்தது ஒளிப்பதிவாளர் ராஜீவ் மேனன் என்பதும் குறிப்பிடத்தக்கது.
ரோஜா படத்தின் அபார வெற்றிக்கு பிறகு இயக்குனர் மணிரத்னம் இயக்கிய படம் பம்பாய். இந்த படத்தில் அரவிந்தசாமி மனிஷா கொய்ராலா நாசர் கிட்டி உள்ளிட்ட பலர் முக்கிய கேரக்டர்களில் நடித்திருந்தனர். மும்பை கலவரத்தை மையப்படுத்தி வெளியான இந்த படம் விமர்சன ரீதியாக பெரிய வெற்றியை பெற்றது. கடந்த 1995ம் ஆண்டு வெளியான படம் இந்த படம் பெரிய அளவில் ரசிகர்களால் கொண்டாடப்பட்டது.
பாபர் மசூதி இடிப்புக்கு பிறகு நாடு முழுவதும் கலவர பூமியாக இருந்தது. வன்முறை சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு பம்பாய் படத்தை மணிரத்னம் டைரக்ட் செய்திருந்தார். இந்த படம் வெளியான நேரத்தில் பெரும் பிரச்னைகளை சந்தித்தது. இந்து பையனும் முஸ்லீம் பெண்னும் காதலித்து திருமணம் செய்வது போன்ற காட்சிகள் படத்தில் வந்தன. இதனால் இயக்குனர் மணிரத்னத்துக்கு பெரிய எதிர்ப்பு கிளம்பியது.
சமீபத்தில் ஒரு நிகழ்ச்சியில் பேசிய ஒளிப்பதிவாளர் மற்றும் நடிகர் ராஜிவ் மேனன் கூறியதாவது, பம்பாய் போன்ற ஒரு படம் தற்போது வெளியானால் தியேட்டர்கள் எரிக்கப்படும். அந்த அளவுக்கு சகிப்புத்தன்மையற்ற நாடாக மாறி இருக்கிறது. இந்தியாவில் முன்பு போன்ற சாதாரண சூழல் தற்போது நீடிக்கவில்லை. மதம் மிகப்பெரிய சக்தியாக மாறிவிட்டது. அது ஒரு பிரச்சனைக்குரிய இடமாக மாறி இருக்கிறது.
பம்பாய் படம் வெளியாகி 30 ஆண்டுகள் ஆகிவிட்டது. ஆனால் இந்தியாவில் முன்பு இருந்த சூழல் தற்போது இல்லை. இந்தியர்களிடம் சகிப்புத்தன்மை குறைந்துவிட்டது என்று கண்டிப்பாக கூற முடியும். பம்பாய் படம் தற்போது வெளியானால் நான் சொன்ன நிகழ்வு கண்டிப்பாக நடக்கும் என்று ஒளிப்பதிவாளர் ராஜிவ் மேனன் ஆதங்கமாக கூறியிருக்கிறார். இது இணையத்தில் தற்போது வைரலாகி வருகிறது.





