- Advertisement -
Homeபொழுதுபோக்குபடையப்பா படத்தில் நடித்த போதே எனக்கு அந்த வாய்ப்பு வந்தது, நகைச்சுவை நடிகர் ரமேஷ்...

படையப்பா படத்தில் நடித்த போதே எனக்கு அந்த வாய்ப்பு வந்தது, நகைச்சுவை நடிகர் ரமேஷ் கண்ணா, சீரியஸா காமெடி பணணாதீங்க பாஸ் – கலாய்த்த ரசிகர்கள்

- Advertisement -

தமிழ் சினிமாவில் காமெடி நடிப்பில் பலர் அசத்தி வருகின்றனர். எனினும் காமெடி நாயகர்களாக வலம் வருபவர்கள் சொற்பமானவர்கள். ஆனால் துணை நடிகர்களாக இருந்தாலும் காமெடி காட்சிகளில் அவர்களது நடிப்பும் ரசிகர்களினம் பலத்த வரவேற்பை பெறும். குறிப்பாக அல்வா வாசு, கொண்டல் ராவ், பாவா லட்சுமணன், போண்டா மணி, கிரேன் மனோகர் என பலரை குறிப்பிட்டுச் சொல்லலாம்.

காமெடி நடிகர்கள் கவுண்டமணி, செந்தில், வடிவேலு, விவேக், சந்தானம், சூரி வரிசையில் சில படங்களில் காமெடி செய்தவர்தான் ரமேஷ் கண்ணா. இயக்குனர் ராமநாராயணன், விக்ரமன் ஆகியோரிடம் உதவி இயக்குனராக பல படங்களில் பணிசெய்த இவரை, உன்னிடத்தில் என்னை கொடுத்தேன் படத்தில் கார்த்திக் நண்பராக நடிக்க வைத்து, காமெடி செய்ய வைத்திருந்தார் இயக்குனர் விக்ரமன்.

- Advertisement -

இந்த படத்தை தொடர்ந்து ப்ரண்ட்ஸ், படையப்பா, வில்லன், வரலாறு உள்ளிட்ட பல படங்களில் நடித்திருந்தார் ரமேஷ் கண்ணா. இவரது இயக்கத்தில் அஜித்குமார் தேவயானி நடித்த தொடரும் படம், சிறந்த குடும்ப சித்திரமாக இருந்தது. சூர்யா நடிப்பில் கேஎஸ் ரவிக்குமார் இயக்கிய ஆதவன் படத்தின் கதை ரமேஷ் கண்ணா உருவாக்கியதுதான்.

சினிமாவில் இயக்குனர், கதாசிரியர், வசனகர்த்தா, காமெடி நடிகர், பட்டிமன்ற பேச்சாளர், டிவி நிகழ்ச்சி தொகுப்பாளர் என பன்முக தன்மை கொண்டவராக இருந்து வரும் ரமேஷ் கண்ணாவின் 2 மகன்களும் சினிமா துறையில்தான் இருக்கின்றனர். ஏஆர் முருகதாஸிடம் உதவி இயக்குனராக ஐஸ்வந்த் கண்ணன் இருக்கிறார். மற்றொரு மகன் பிரதீஷ் திவாகரனும் உதவி இயக்குனராக இருக்கிறார்.

- Advertisement -

சமீபத்தில் ஒரு நேர்காணலில் பங்கேற்ற நடிகர் ரமேஷ் கண்ணா கூறியதாவது, சினிமா இயக்குனராகும் ஆசையில் 1983ம் ஆண்டில் இந்த துறைக்கு வந்தேன். 40 ஆண்டுகளாக சினிமாவில் இருப்பது பெருமையளிக்கிறது. நான் காமெடியனாக நடித்த பல படங்கள் வெள்ளி விழா கொண்டாடியிருக்கின்றன. சினிமாவில் காமெடி, சென்டிமென்டுக்கு முன்பு முக்கியத்துவம் இருந்தது. இப்போது வெட்டு, குத்து, அடிதடி, துப்பாக்கி சூடு என ஆக்‌ஷனுக்கு சினிமா மாறிவிட்டது.

படையப்பா, வில்லன் படங்களில் நடித்த போதே எனக்கு ஹீரோ வாய்ப்பு வந்தது. ஹீரோ என்பது பெரிய விஷயம். முழு படத்துக்கும் அவர்தான் பொறுப்பு. ஹீரோ என்றால் சும்மா இல்லை. ஆனால் காமெடி நடிகர்களான சந்தானம், சூரி, யோகிபாபு போன்றவர்கள் ஹீரோக்களாக நன்றாக நடிக்கின்றனர். ஆனால் காமெடி நடிகர்கள் ஹீரோ ஆகி விடுவதால் படங்களில் காமெடி குறைந்து விடுகிறது, என்று ரமேஷ் கண்ணா கூறியிருக்கிறார்.

- Advertisement -

சற்று முன்