- Advertisement -
Homeபொழுதுபோக்குஷூட்டிங் ஸ்பாட்டில், விஷ்ணு விஷால் மீது இப்படி ஒரு புகாரா? - ரஜினியுடன் நடித்ததால் ஒருவேளை...

ஷூட்டிங் ஸ்பாட்டில், விஷ்ணு விஷால் மீது இப்படி ஒரு புகாரா? – ரஜினியுடன் நடித்ததால் ஒருவேளை பாட்ஷா வாக மாறி விட்டாரோ?

- Advertisement -

நடிகர் விஷ்ணு விஷால், தமிழ் சினிமாவில் ஒரு வளர்ந்து வரும் நடிகராக இருந்து வருகிறார். சில வெற்றிப் படங்களிலும் அவர் நடித்திருக்கிறார். அவரது நடிப்பு மிக யதார்த்தமாக இருக்கும் என்பதால், நல்ல இயக்குநர்களின் படங்களில் நடிக்கும் வாய்ப்பை அவர் அடிக்கடி பெறுகிறார்.

அந்த வகையில் வெண்ணிலா கபடிக்குழு, இன்று நேற்று நாளை, முண்டாசுப்பட்டி, ராட்சசன், வேலைன்னு வந்துட்டா வெள்ளக்காரன், சிலுக்குவார்பட்டி சிங்கம், கட்டா குஸ்தி போன்ற பல வெற்றிப் படங்களில் நடித்திருக்கிறார். காமெடி கலந்த ஹீரோ ரோல் இவருக்கு நல்ல வெற்றியை தருகிறது.

- Advertisement -

இதில் குறிப்பாக முண்டாசுப்பட்டி, சிலுக்குவார்பட்டி சிங்கம் போன்ற காமெடி படங்கள் விஷ்ணு விஷாலுக்கு நல்ல வெற்றியை கொடுத்தது. அதே போல் பள்ளி மாணவிகளை கடத்திச் சென்று கொடூரமாக கொலை செய்யம் சைக்கோ கொலைகாரன் கதையான ராட்சசன் படத்திலும், போலீஸ் எஸ்ஐ கேரக்டரில் மிகச்சிறந்த நடிப்பை வெளிப்படுத்தினார் விஷ்ணு விஷால்.

இந்நிலையில் நடிகர் விஷ்ணு விஷால் குறித்த ஒரு பரபரப்பான தகவல் வெளியாகி இருக்கிறது. அதாவது அவர் படப்பிடிப்பு தளத்துக்கு வருகிறார் என்றால், அவருக்கு முன்பே, அவரது ஆட்கள் 20 பேர் அந்த இடத்துக்கு வந்து விடுகிறார்கள். அதை செய், இதை செய் என பல முன்னேற்பாடுகளை செய்து, முதல்வர் வருகைக்கு முன் செய்யப்படும் அட்ராசிட்டி போல பயங்கர பரபரப்பை ஏற்படுத்தி விடுகின்றனர்.

- Advertisement -

அதன்பின் தனது காரில் வந்து இறங்கும் விஷ்ணு விஷால், கேரவனுக்குள் சென்று விட்டு பிறகு வருகிறார். அவர் அங்கு காட்டும் ஆட்டிட்யூட்டை பார்த்து அங்கு இருக்கும் படக்குழுவினர் அப்படியே அசந்து போய் விடுகிறார்களாம். அதுமட்டுமின்றி விஷ்ணு விஷாலின் ஹேர் டிரஸ்ஸர் மும்பையில் இருந்து வருகிறார். அவருக்கு தினசரி சம்பளம் ரூ. 18 ஆயிரம் வழங்கப்படுகிறது.

சூப்பர் லெவலில் இருக்கும் ஸ்டார் நடிகர்கள் ரஜினி, விஜய் என ஷூட்டிங் ஸ்பாட்டில் இருக்கும்போது எந்த பில்டப்பும் செய்யாமல் அமைதியாக இருக்கின்றனர். ஆனால் வளரும் நடிகரான விஷ்ணு விஷால் ஓவராக அலப்பரை செய்வது பலரையும் எரிச்சலடைய செய்து வருகிறது. ஒருவேளை, லால் சலாம் படத்தில் ரஜினியுடன் நடித்ததால், தன்னையும் பெரிய ஸ்டாராக, பாட்ஷா ரஜினி போல நினைத்துக்கொண்டாரா, என படப்பிடிப்பு தளத்தில் இருப்பவர்கள் கலாய்த்து வருகின்றனர்.

- Advertisement -

சற்று முன்