- Advertisement -
Homeபொழுதுபோக்குவெற்றிமாறன் - சிம்பு கூட்டணிக்கு ஆப்பு வைத்தாரா நடிகர் தனுஷ்? நயன்தாரா கிட்ட ரூ. 10...

வெற்றிமாறன் – சிம்பு கூட்டணிக்கு ஆப்பு வைத்தாரா நடிகர் தனுஷ்? நயன்தாரா கிட்ட ரூ. 10 கோடி, இங்கே குபேரா கேட்டது எவ்ளோ தெரியுமா?

- Advertisement -

நடிகர் தனுஷ் பிஸியாக பல படங்களில் நடித்து வருகிறார். தவிர வுண்டர்ஃபார் பிலிம்ஸ் என்ற பெயரில் தயாரிப்பு நிறுவனமும் நடத்தி வருகிறார். பல படங்களில் அவரே சொந்தக்குரலில் பாடியும் இருக்கிறார். இதுதவிர ப பாண்டி ராயன் நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் இட்லி கடை போன்ற படங்களை அவரே டைரக்ட் செய்திருக்கிறார்.

இதில் இட்லி கடை படம் மட்டும் இன்னும் ரிலீஸ் ஆகவில்லை. அந்த படம் வருகிற செப்டம்பரில் ரிலீஸ் ஆகலாம் என்று கூறப்படுகிறது. ராயன் படம் அளவுக்கு நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் படம் தனுஷூக்கு வெற்றியை தரவில்லை. இப்போது தேரே இஸ்க் மெய்ன் என்ற இந்தி படத்தில் தனுஷ் நடித்து வருகிறார்.

- Advertisement -

சமீபத்தில் வெளியான குபேரா படம் உலகம் முழுவதும் ரூ. 118 கோடி வசூலித்த நிலையில், தமிழ்நாட்டில் குபேரா மொத்த வசூல் 17 கோடி ரூபாயாக தான் இருந்துள்ளது. குபேரா படம் தமிழ்நாட்டில் பிளாப் ஆகி விட்டது. இந்த சூழலில் நடிகர் சிம்பு நடிக்கும் படத்தை வெற்றிமாறன் இயக்க உள்ளார். இந்த படம் வடசென்னை படத்தின் கிளை கதையில் உருவாகும் என்ற தகவல் ஏற்கனவே வெளியானது.

வெற்றிமாறன் இயக்கத்தில் உருவான வடசென்னை படத்தில் கதாநாயகனாக நடித்த நடிகர் தனுஷ், அந்த படத்தை தயாரித்தும் இருந்தார். அந்நிலையில் வடசென்னை 2 படத்திலும் தனுஷ்தான் நாயகனாக நடிப்பதாக இருந்தது. ஆனால் இப்போது சிம்பு நாயகனாக நடிக்க வடசென்னை சார்ந்த படத்தின் கிளை கதையில் ஒரு படத்தை டைரக்ட் செய்ய வெற்றிமாறன் ஏற்பாடுகளை செய்து வருகிறார்.

- Advertisement -

இதுகுறித்து சில மாதங்களுக்கு முன்பே, இந்தி பட படப்பிடிப்பில் இருந்த நடிகர் தனுஷை சந்தித்த இயக்குனர் வெற்றிமாறன் பேசியிருக்கிறார். அப்போது ஒண்ணும் பிரச்னை இல்லை. நீங்க பண்ணுங்க என்று சிரித்துக்கொண்டே கூறியிருக்கிறார். இப்போது சில தினங்களுக்கு முன் இயக்குனர் வெற்றிமாறனுக்கு போன் செய்த நடிகர் தனுஷ், உங்க படத்தை தயாரிக்கிற புரடியூசர் கிட்ட சொல்லி என் அக்கவுண்டுக்கு 20 கோடி ரூபாய் மட்டும் போட்டு விட்டுடுங்க என்று கூலாக பேசியிருக்கிறார்.

இதைக் கேட்ட இயக்குனர் வெற்றிமாறன் அதிர்ச்சி அடைந்திருக்கிறார். சரிங்க பார்த்துக்கலாம் என்று மட்டும் கூறிவிட்டு வெற்றிமாறன் போனை வைத்திருக்கிறார். திருமண வீடியோவில் நானும் ரவுடிதான் படப்பிடிப்பின் போது எடுத்த காட்சிகளை பயன்படுத்தியதற்காக நடிகை நயன்தாராவிடம் ரூ. 10 கோடி கேட்ட நடிகர் தனுஷ், இப்போது தன்னை வளர்த்து விட்ட வெற்றிமாறனிடம் ரூ. 20 கோடி கேட்டிருக்கிறார். வெற்றிமாறன் இயக்கிய பொல்லாதவன் ஆடுகளம் அசுரன் வடசென்னை போன்ற படங்களில் நடிக்காமல் இருந்திருந்தால் தனுஷ் பெரிய நடிகராகி இருக்க வாய்ப்பில்லை. வளர்த்த கடா மார்பில் பாய்வது போல் இப்படி கேட்டிருக்காரே என தமிழ் சினிமா ரசிகர்கள் அதிர்ச்சியில் உள்ளனர்.

- Advertisement -

சற்று முன்