சமீபகாலமாக நடிகர் தனுஷ் இயக்குனராக மாறிவிட்டார். ப பாண்டி ராயன் நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் இட்லிகடை போன்ற படங்களை அவரே டைரக்ட் செய்திருக்கிறார். தயாரிப்பாளர் பாடகராகவும் தனுஷ் இருக்கிறார். அதிகளவில் இளம் வயதினரை ரசிகர்களாக கொண்டிருப்பவர் நடிகர் தனுஷ் என்பதும் குறிப்பிடத்தக்கது.
கடந்த சில ஆண்டுகளாக நடிகர் தனுஷ் நடித்த படங்கள் பெரிய வரவேற்பை பெறவில்லை. ராயன் படத்துக்கு பிறகு வெளியான இட்லி கடை குபேரா கர போன்ற படங்கள் சரியாக போகவில்லை. இந்த படங்கள் மெசேஜ் சொல்லும் படங்களாக இருந்தன. தந்தை பாசம் சொந்த தொழில் விவசாயம் போன்ற விஷயங்களை மையப்படுத்திய கதைக்களங்களாக இருந்தன.
நடிகர் தனுஷிடம் இருந்து வேலையில்லா பட்டதாரி மாரி கொடி போன்ற கமர்ஷியல் ஆக்சன் படங்களை அவரது இளம் வயது ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர். ஆனால் அவர் சென்டிமென்ட் கதையம்சம் கொண்ட படங்களில் நடித்து ரசிகர்களை வெறுப்பேற்றி விடுகிறார். இளம் வயது ஜென்ஸி ரசிகர்களுக்கு இந்த அட்வைஸ் கதை எல்லாம் பிடிப்பது இல்லை.
அதனால்தான் நடிகர் தனுஷ் என்னதான் உருக்கமாக நடித்தாலும் இட்லி கடை குபேரா கர போன்ற படங்களுக்கு ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்த்த வரவேற்பும் ஆதரவும் கிடைக்கவில்லை. இனி இளம் ரசிகர்களை திருப்திப்படுத்த வேண்டும் என்கிற அடிப்படையில் படங்களில் நடிக்க தனுஷ் இப்போது முடிவு செய்திருக்கிறார்.
அமரன் பட இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் இப்போது தனுஷ் நடித்து வரும் டி 55 படம் கேங்ஸ்டர் படமாக உருவாகிறது. இந்த படத்தின் மொத்த பட்ஜெட் ரூ. 160 கோடியாகும். இதைத் தொடர்ந்து அடுத்த 2 படங்களும் இதே போன்ற ஆக்சன் கலந்த கமர்ஷியல் படங்களாக தான் நடிகர் தனுஷ் நடிக்க திட்டமிட்டுள்ளதாக தெரிய வருகிறது. லப்பர் பந்து இயக்குனர் தமிழரசன் பச்சமுத்து இயக்கும் தனுஷ் படமும் ஆக்சன் படம் என்று சொல்லப்படுகிறது.
இனிமேல் அப்பா மகன் சென்டிமென்ட் அண்ணன் தம்பி சென்டிமென்ட் அக்கா தம்பி சென்டிமென்ட் போன்ற ஜானர் படங்களில் நடித்தால் இளம் ரசிகர்களுக்கு போரடித்து விடும். இளம் வயது கதாநாயகனாக ஆக்சன் காமெடி காதல் என ஜாலியாக படங்களை ரசிகர்களுக்கு தரலாம் என்று அந்த வகை ஜானர் படங்களுக்கு தனுஷ் மாறிவிட்டதாக கோலிவுட்டில் இருந்து தகவல் வெளியாகி உள்ளது.





