- Advertisement -
Homeபொழுதுபோக்குதக்லைஃப் படத்துக்கு கிடைத்த மோசமான தோல்வி… முதல் முறையாக அதுபற்றி பேசிய இயக்குனர் மணிரத்னம் -...

தக்லைஃப் படத்துக்கு கிடைத்த மோசமான தோல்வி… முதல் முறையாக அதுபற்றி பேசிய இயக்குனர் மணிரத்னம் – நாயகன் போல எதிர்பார்க்கலாமா?

- Advertisement -

கடந்த 1987ம் ஆண்டில் இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் வெளியான படம் நாயகன். இந்த படத்தில் வேலு நாயக்கர் என்ற கேரக்டரில் நடித்த நடிகர் கமல்ஹாசனுக்கு இந்த படம் தேசிய விருதை பெற்று தந்தது. அதன்பிறகு 38 ஆண்டுகள் கழித்து மீண்டும் இயக்குனர் மணிரத்னம் நடிகர் கமல்ஹாசன் இணைந்து உருவாக்கிய படம்தான் தக்லைஃப்.

தக்லைஃப் படத்தை நடிகர் கமல்ஹாசன் தனது சொந்த தயாரிப்பு நிறுவனமான ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனம் சார்பில் சுமார் 300 கோடி ரூபாய் பட்ஜெட்டில் மிகப் பிரம்மாண்டமாக தயாரித்திருந்தார். இந்த படத்தில் நடிகர் கமல்ஹாசனுடன் முதல் முறையாக நடிகர் சிம்புவும் இணைந்து நடித்திருந்தார்.

- Advertisement -

மணிரத்னம் – கமல்ஹாசன் இருவரும் இணைந்து தக்லைஃப் படத்தின் கதையை எழுதிய நிலையில், படத்துக்கு இசைப்புயல் ஏஆர் ரகுமான் இசையமைத்திருந்தார். திரிஷா அபிராமி அசோக் செல்வன் மலையாள நடிகர் ஜோஜூ ஜார்ஜ் நாசர் உள்ளிட்ட பல முக்கிய நட்சத்திரங்கள் நடித்த தக்லைஃப் படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த 5ம் தேதி வெளியானது.

ஆனால் படம் நினைத்த அளவுக்கு ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யவில்லை. மாறாக எதிர்மறையான விஷயங்களை கொண்டதாகவும் இருந்தது. முதல் நாள் முதல் காட்சியை பார்த்த ரசிகர்களே இது மணிரத்னம் படம் தானா என்று கேள்வி கேட்கும் அளவுக்கு படத்தின் தரம் மிகவும் மோசமாக இருந்தது. குறிப்பாக கதை திரைக்கதை இயக்கத்தில் மணிரத்னம் வழக்கமான தனது முத்திரையை பதிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

மேலும் நடிகை திரிஷாவின் இமேஜை டேமேஜ் செய்யும் விதமாக இந்திராணி என்ற கேரக்டரில் அவர் நடித்திருந்தது மிகப்பெரிய சர்ச்சையை கிளப்பியது. தக்லைஃப் படம் மிகப்பெரிய தோல்வியை சந்தித்த நிலையில், இயக்குனர் மணிரத்னம் முதல் முறையாக அதுபற்றி மனம் திறந்து வெளிப்படையாக பேசியிருக்கிறார்.

சமீபத்தில் ஒரு நிகழ்ச்சியில் பேசிய இயக்குனர் மணிரத்னம் கூறுகையில், எங்கள் இருவரிடமிருந்து இன்னொரு நாயகன் படத்தை எதிர்பார்த்தவர்களுக்கு நான் சொல்வது ஒன்றே ஒன்றுதான். எங்களை மன்னித்து விடுங்கள். நாங்கள் முற்றிலும் வேறு ஒன்றை செய்ய விரும்பினோம். ஓவர் எதிர்பார்ப்பு என்பதை தாண்டி இது வேறு விதமான எக்ஸ்பக்டேசன் என்று மணிரத்னம் கூறி இருக்கிறார். ரசிகர்களின் விருப்பத்துக்கு மாறாக, தங்களது விருப்பத்திற்காக தக்லைஃப் படத்தை உருவாக்கியதே மிக மோசமான தோல்விக்கு காரணம் என்று மணிரத்னம் ஒத்துக்கொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

சற்று முன்