- Advertisement -
Homeபொழுதுபோக்குமதுரை மாநாட்டில் நடிகர் விஜய் பேசியதை கேட்ட போது மனப்பாடம் செய்த வசனங்கள் போல தான்...

மதுரை மாநாட்டில் நடிகர் விஜய் பேசியதை கேட்ட போது மனப்பாடம் செய்த வசனங்கள் போல தான் இருந்தது – ஓபனாக ஸ்டேட்மென்ட் தந்த பிரபல இயக்குனர்!

- Advertisement -

நடிகர் விஜய் இப்போது தமிழக வெற்றிக் கழகம் என்ற அரசியல் இயக்கத்தின் தலைவராக தமிழ்நாட்டு அரசியல் களத்தில் இருந்து வருகிறார். திமுக பாஜக கட்சிகளை தொடர்ந்து கடுமையாக விமர்சித்து பேசி வருகிறார். கடந்தாண்டில் விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் தனது கட்சியின் முதல் மாநாட்டை வெற்றிக்கரமாக அவர் நடத்திக் காட்டினார்.

தொடர்ந்து தவெக கட்சியின் 2வது அரசியல் மாநில மாநாடு கடந்த 21ம் தேதி மதுரையில் உள்ள பாரபத்தியில் மிக பிரமாண்டமாக நடைபெற்றது. லட்சக்கணக்கான மக்கள் திரண்ட இந்த மாநாட்டில் பங்கேற்ற தலைவர் விஜய் தொடர்ந்து திமுக பாஜக கட்சிகள் குறித்து கடுமையான விமர்சனங்களை முன்வைத்தார். தவெக தான் 2026ம் ஆண்டில் ஆட்சியை பிடிக்கும் என்றும் உறுதியாக கூறியிருக்கிறார்.

- Advertisement -

அந்த மாநாட்டில் நடிகர் விஜய், தமிழக முதல்வர் திமுக தலைவர் முக ஸ்டாலினை அங்கிள் அங்கிள் என்று அழைத்துப் பேசியது தமிழக மக்கள் மத்தியில் பலத்த ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. தன்னை மக்கள் அப்பா என்று அழைப்பதாக ஸ்டாலின் கூறியிருந்த நிலையில், அவரை விஜய் அங்கிள் அங்கிள் என்று கலாய்த்து பேசியது பெரிய பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் நடிகர் விஜய் நடித்த பூவே உனக்காக படத்தில் உதவி இயக்குனராக பணிசெய்தவர் ராஜகுமாரன். தொடர்ந்து நீ வருவாய் என விண்ணுக்கும் மண்ணுக்கும் காதலுடன் போன்ற படங்களை அவர் டைரக்ட் செய்திருக்கிறார். இவரது மனைவி நடிகை தேவயானி. விஜயுடன் பிரண்ட்ஸ், நினைத்தேன் வந்தாய் ஆகிய படங்களில் தேவயானி நடித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

நடிகர் விஜய் மதுரை தவெக மாநாட்டில் பேசியது குறித்து இயக்குனர் ராஜகுமாரன் கூறியிருப்பதாவது, மதுரையில் நடந்த கட்சி மாநாட்டில் நடிகர் விஜய் அந்த இடத்தில் மனதில் தோன்றியதை எல்லாம் பேசவில்லை. நன்கு தயாராகி பயிற்சி பெற்று வந்துதான் பேசினார். அது சினிமா வசனம் போல தான் இருந்தது.

ஒரு தலைவன் தனது தொண்டர்களிடம் பேசும் போது மனதில் என்ன தோன்றுகிறதோ அதை அந்த இடத்தில் பேச வேண்டும். ஆனால் அதை விஜய் செய்யவில்லை என்பது எனக்கு சிறிது வருத்தம் அளிக்கிறது. இனி அவர் இதை மாற்றிக் கொண்டு ஒரு நல்ல தலைமைப் பண்புடன் பேச வேண்டும் என்று நான் ஆசைப்படுகிறேன் என்று இயக்குனர் ராஜ்குமாரன் கூறியிருக்கிறார். இது தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

- Advertisement -

சற்று முன்