தமிழ் சினிமாவில் இயக்குனராக பல சூப்பர் ஹிட் படங்களை தந்து இப்போது நடிகராகவும் ரசிகர்களின் மனம் கவர்ந்தவராக இருக்கிறார் இயக்குனர் செல்வராகவன். இயக்குனர் கஸ்தூரி ராஜாவின் மகன். தனது தம்பியை தனுஷ் என்ற நல்ல நடிகராக தமிழ் சினிமா ரசிகர்களுக்கு உருவாக்கி தந்தவர். அடிக்கடி வீடியோ வெளியிட்டு சமூக கருத்துகளை, தனது சொந்த அனுபவங்களை தனது ரசிகர்களுடன் பகிர்ந்துக்கொள்ளும் வழக்கம் அவரிடம் உள்ளது. இப்போது ரசிகர்களுக்கு அட்வைஸ் சொல்லும் அவரது வீடியோ வெளியாகி வைரலாகி வருகிறது.
இந்த வீடியோவில் நெருக்கடியான நேரத்தில் உதவ வருபவர்கள், அட்வைஸ் செய்ய வருபவர்கள் குறித்து தனது கருத்தை அவர் தெரிவித்துள்ளார். இயக்குனர் செல்வராகவன் இப்போது வெளியிட்டுள்ள வீடியோ ஒன்றில் கூறியிருப்பதாவது, நீங்க வாழ்க்கையில் வழுக்கி விழுந்துட்டாலோ, வாழ்க்கையில் பெரிய சோகம் நடந்துட்டாலோ உங்க உதவிக்கு யாரும் வரமாட்டாங்க.
அப்கோர்ஸ் அப்போ ஓடிவந்து மச்சான் நான் சொல்றதை கேளுடா எல்லாம் சரியாயிடும் என்று வர்ற ஒருத்தனும் சொன்னா கேளுடி எல்லாம் சரியாயிடும் என்ன பிரச்னை என்று வருகிற தோழியும், இப்படி நிறைய பேர் வருவாங்க. ஆயிரம் பேர் அப்படி வருவாங்க அறிவுரை சொல்றதுக்கு மட்டும்.
நீங்க இதையெல்லாம் கேட்டு நடந்து நடந்து, நல்ல புருஷனை தொலைச்ச நிறைய பொண்ணுங்க இருக்காங்க. அவங்களை எனக்கு தெரியும். அதே மாதிரி நல்ல மனைவியை தொலைச்ச நிறைய ஆண்களும் இருக்காங்க. அவங்களை எனக்கு தெரியும்.
இது புதைகுழி மாதிரி. அவங்க சொல்றதை கேட்டு கேட்டு கொஞ்சம் கொஞ்சமா கொஞ்சம் கொஞ்சமா நீங்க உள்ளே போயி அப்புறம் காணாமல் போயிடுவீங்க. இதுக்கு என்ன பண்றதுன்னா இஞ்ச் பை இஞ்ச் இஞ்ச் பை இஞ்சா அப்படியே நம்மளை ஊர்ந்து ஊர்ந்து ஊர்ந்து போய் கஷ்டப்பட்டு கிடைக்கிற எதையாவது புடிச்சு கஷ்டப்பட்டு நிற்கணும்.
அப்படியே நிற்க முடியாமல் நின்று நொண்டி அப்புறம் வலி எல்லாம் பொறுத்துக்கிட்டு மனசெல்லாம் இரும்பாகி புல்லா அப்படியே வைராக்கியத்தோடு நம்மளே நடக்க ஆரம்பிச்சு அப்புறமா ஓட ஆரம்பிக்கணும்.இதுதான் ஒரே வழி, இதைத்தான் கடவுளும் சொல்கிறார் என்று இயக்குனர் செல்வராகவன் அந்த வீடியோவில் பேசியிருக்கிறார்.





