- Advertisement -
Homeபொழுதுபோக்குவருமானத்துக்காக விமர்சகர்கள் தவறான ரிவ்யூ கொடுக்கிறார்கள் - இயக்குனர் சுசீந்திரன் பகிரங்க குற்றச்சாட்டு!

வருமானத்துக்காக விமர்சகர்கள் தவறான ரிவ்யூ கொடுக்கிறார்கள் – இயக்குனர் சுசீந்திரன் பகிரங்க குற்றச்சாட்டு!

- Advertisement -

தமிழ் சினிமாவில் கவனிக்கப்படும் இயக்குனர்களில் ஒருவராக இருப்பவர் சுசீந்திரன். கடந்த 2009ம் ஆண்டில் வெளியான வெண்ணிலா கபடிக்குழு படம் மூலம் இயக்குனராக தமிழ் சினிமாவில் அறிமுகமானார். நடிகர் விஷ்ணு விஷால் அறிமுகமானது இந்த படத்தில்தான். நடிகர் சூரியின் பரோட்டா காமெடி இடம்பெற்றதும் இந்த படத்தில்தான். கபடி விளையாட்டை மையப்படுத்திய இந்த படம் வெற்றி பெற்றது.

தொடர்ந்து நான் மகான் அல்ல அழகர்சாமியின் குதிரை ஆதலால் காதல் செய்வீர் ஜீவா பாண்டியநாடு பாயும் புலி சாம்பியன் மாவீரன் கிட்டு என பல வெற்றிப் படங்களை இயக்கி இருக்கிறார். இதில் விக்ரம் நடித்த ராஜபாட்டை சிம்பு நடித்த ஈஸ்வரன் போன்ற படங்கள் எதிர்பார்த்த அளவுக்கு ரசிகர்களிடம் வரவேற்பை பெறவில்லை.

- Advertisement -

இந்நிலையில் நடிகர் விஜய் ஆண்டனி நடிப்பில் மார்கன் படம் சமீபத்தில் வெளியானது. இந்த படத்தின் நன்றி அறிவிப்பு விழா சென்னையில் நடந்தது. இதில் சிறப்பு விருந்தினராக இயக்குனர் சுசீந்திரன் கலந்து கொண்டார். அப்போது அவர் பேசியதாவது, சமீபத்தில் வெளியான டிஎன்ஏ மார்கன் படங்களுக்கு ஆரம்பத்தில் நல்ல ரிவ்யூ வரவில்லை.

ஆனால் நான் தியேட்டருக்கு சென்று பார்த்தபோது படம் நன்றாக இருந்தது. சில நாட்களில் படம் பிக்கப் ஆனது. இப்போது சில யூடியூப்பர்கள் தங்கள் வியூஸ் விளம்பர வருமானத்துக்காக தவறான ரிவ்யூ கொடுக்கிறார்கள். சினிமாவில் இருந்து கொண்டே சினிமாவை கொலை செய்கிறார்கள். இப்போது இதில் ஏகப்பட்ட டீம் வந்துவிட்டது.

- Advertisement -

ஒரு டீம் சார்பாக டிக்கெட் எடுத்து கொடுத்து 100 பேரை அனுப்புவோம். அவங்க வெளியே வரும்போது படம் ஆகா ஓகோ என்பார்கள் என ஐடியா கொடுக்கிறார்கள். மற்றொரு டீம் தங்களுக்கு வேண்டியதை வாங்கிக்கொண்டு தங்களுக்கு வேண்டியவர்களை தியேட்டருக்குள் அனுப்பிவிட்டு படத்தைப் பற்றி தவறாக சொல்லச் சொல்கிறார்கள் என்று இந்த விழாவில் இயக்குனர் சுசீந்திரன் ஆவேசமாக பேசி இருக்கிறார்.

இப்போது யூடியூப் விமர்சகர்கள் மீது தமிழ் சினிமாவில் கடும் விமர்சனம் முன் வைக்கப்படுகிறது. யூடியூப்பர் விமர்சனம் செய்யக் கூடாது என்று நடப்பு தயாரிப்பாளர் சங்கம் கோர்ட்டில் வழக்கு தொடுத்தது. ஆனால் கோர்ட் அந்த வழக்கை தள்ளுபடி செய்துவிட்டது. இதனால் போலியாக ஒரு படத்தை புகழ்வது அல்லது மட்டம் தட்டி பேசுவது போன்ற விமர்சனம் செய்வதை தடுக்க முடியாது. ஆனால் கட்டுப்படுத்தலாம் என்ற நிலையே நீடிக்கிறது.

- Advertisement -

சற்று முன்