- Advertisement -
Homeபொழுதுபோக்குஇயக்குனர் ஷங்கர் படத்தில் ஹீரோயினாக நடிக்க தேடி வந்த வாய்ப்பு, மகளுக்கு தடை போட்ட...

இயக்குனர் ஷங்கர் படத்தில் ஹீரோயினாக நடிக்க தேடி வந்த வாய்ப்பு, மகளுக்கு தடை போட்ட பிரபல நடிகர் – நல்ல சான்ஸை இப்படி விட்டுட்டாரே?

- Advertisement -

இயக்குனர் ஷங்கர் படத்தில் நடிப்பது பல நடிகர் நடிகைகளுக்கு கனவாக, பெரிய ஆசையாக, சிலருக்கு லட்சியமாக கூட இருக்கிறது. ஏனெனில் அவரது படத்தில் நடித்தால், அது 100 படங்களில் நடித்த அனுபவத்தை கொடுக்கும். ஏனெனில் பாரதிராஜா, வெற்றிமாறன், பாலா, அமீர் போன்ற படங்களில் நடிப்பதால் நடிப்பின் நுணுக்கங்களை மிக தெளிவாக கற்றுக்கொள்ள முடியும். ஒவ்வொரு கதாபாத்திரத்தையும் அவர்கள் நடிக்க வைப்பதை விட, திரையில் வாழ வைக்க அவ்வளவு மெனக்கெடுவார்கள்.

அதனால் தான் ஷங்கர் போன்ற பெரிய இயக்குனர்களின் படங்களில் ஓரிரு காட்சிகளில் நடித்தால் கூட போதும். சம்பளம் இல்லாவிட்டாலும் கூட பரவாயில்லை என்று கூறும் நடிகர், நடிகையர் பலர் உண்டு. அதுமட்டுமின்றி ஷங்கர் படத்தில் நடித்தால், நிச்சயம் அந்த கேரக்டர் ரசிகர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெறும். அடுத்தடுத்த பட வாய்ப்புகள் வரும் என்பதும் உறுதி.

- Advertisement -

நடிகர் ஷங்கர் இயக்கிய ஜெண்டில்மேன், காதலன், முதல்வன், சிவாஜி, ரோபோ, 2.0, அந்நியன், ஐ, இந்தியன், நண்பன் என அனைத்து படங்களுமே பெரிய ஹிட் படங்கள்தான். அதிலும் சிவாஜி படத்தில் ரஜினியை வேற லெவலில் காட்டியிருப்பார், எந்திரன் படம் எல்லாம் வேறு இயக்குனர்களால் அப்படி ஒரு படத்தை தந்திருக்கவே முடியாது. வேற லெவலில் படத்தை இயக்கியிருந்தார்.

கருப்பு பணம், அரசியல்வாதிகள் ஊழல், கல்வி நிறுவனங்கள் தரும் நெருக்கடி, லஞ்சம் ஊழல் உள்ளிட்ட படங்களை தந்த பிரமாண்ட இயக்குனர் ஷங்கர், இளம் வயது காதலை, மாணவ பருவத்துகால நட்பை சொன்ன படம்தான் பாய்ஸ். இந்த படம் ஒரு தரப்பினருக்கு பிடிக்காமல் போனது. ஏனெனில் இந்த படத்தில் சில காட்சிகள் செக்ஸியாக இருந்ததாக புகார் எழுந்ததால் இது குடும்பத்துடன் பார்க்க முடியாத படமாக விமர்சிக்கப்பட்டது.

- Advertisement -

ஆனால் இந்த படத்தின் கதைக்கரு, நடிக்கும் கேரக்டர்கள் அடிப்படையில் சில காட்சிகள் அப்படி இருந்தது உண்மைதான். ஆனால் அதில் கதைக்கான தேவை இருந்ததே தவிர, எதுவும் மிகையாக திணிக்கப்படவில்லை. எந்த காட்சியிலும் வரம்பு மீறல் என்பது இல்லாமல், கதைக்கான காட்சிகள் மட்டுமே இருந்தன. டீன் ஏஜ் வயதினர் காதல் கதையை, பெண்ணாசையை அந்த எல்லைக்குள்தான் சொல்ல முடியும். அப்படித்தான் சொல்லியிருந்தார் டைரக்டர் ஷங்கர்.

இந்த படத்தில் சித்தார்த், ஜெனிலியா, பரத், மணிகண்டன், தமன், நகுல், விவேக் ஆகியோர் முக்கிய கேரக்டரில் நடித்திருந்தனர். இந்த படத்தில் ஜெனிலியா கேரக்டரில் முதலில் நடிக்க இருந்தது நடிகர் சரத்குமார் மகள் வரலட்சுமிதான். சித்தார்த் – வரலட்சுமியை வைத்து போட்டோஷூட் கூட நடத்தி விட்டார் டைரக்டர் ஷங்கர். ஆனால் இந்த படத்தில் நீ நடிக்கவே கூடாது என மகளுக்கு தடை விதித்துள்ளர் சரத்குமார். அதனால் ஜெனிலியா கேரக்டரில் நடிக்கும் வாய்ப்பை இழந்திருக்கிறார் வரலட்சுமி. ஆனால் சில ஆண்டுகளுக்கு பிறகு போடா, போடி படத்தின் மூலம் வரலட்சுமி நடிக்க வந்துவிட்டார் என்பது கவனிக்கத்தக்கது.

- Advertisement -

சற்று முன்