தமிழ் சினிமாவில் நட்சத்திர நடிகராக உச்சத்தில் இருப்பவர் விஜய். இப்போது தமிழக வெற்றிக் கழகம் என்ற அரசியல் இயக்கத்தின் தலைவராக வலம் வருகிறார். அரசியல் களத்தில் அவர் இப்போது ஒரு பெரிய பிரளயத்தையே ஏற்படுத்தி வருகிறார். வருகிற தேர்தலில் விஜய்தான் முதல்வர் என்று பலரும் இணையத்தில் கூறி பரபரப்பை ஏற்படுத்தி வருகின்றனர்.
இந்த சூழலில் நடிகர் விஜய்க்கு அரசியல் ரீதியாகவும் குடும்ப ரீதியாகவும் மிக மோசமான பிரச்னைகளை சவால்களை சந்தித்து வருகிறார். கரூர் சம்பவம் குறித்து சிபிஐ விசாரணை மனைவி சங்கீதா கோர்ட்டில் தொடுத்துள்ள விவாகரத்து வழக்கு திரிஷாவுடன் கிசுகிசு மற்றும் தேர்தலில் தனித்து போட்டி என விஜய்க்கு ஏகப்பட்ட பிரச்னைகள் இருந்து வருகின்றன.
இந்த சூழ்நிலையிலும் விஜய் துணிச்சலாக வருகிற சட்டசபை தேர்தலை எதிர்கொள்ள தயாராகி வருகிறார். திமுக மற்றும் அதிமுக கூட்டணி கட்சிகளின் பலத்துடன் தேர்தலை சந்திக்க உள்ளது. மேலும் வைட்டமின் ப மூலமாகவும் வாக்காளர்களை தன்வசப்படுத்த பல கட்சிகள் திட்டமிட்ட அதற்கேற்ப செயல்படவும் தயாராகி வருகின்றன.
இந்நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமடைந்த கானா வினோத், நடிகர் விஜய்க்காக பாட மாட்டேன் என்று ஒரு நேர்காணலில் பேசியிருப்பது இணையத்தில் வைரலாகி வருகிறது. பிக்பாஸ் சீசன் 9ல் போட்டியாளராக கலந்துக்கொண்டவர் பாடகர் கானா வினோத். டைட்டில் வின்னராக ஜெயிக்க வேண்டிய இவர் 18 லட்சம் ரூபாய் பணத்துடன் வெளியேறியது பார்வையாளர்களை அதிர்ச்சியடைய வைத்தது.
சமீபத்தில் ஒரு நேர்காணலில் பங்கேற்ற பிக்பாஸ் கானா வினோத்திடம் நடிகர் விஜய்க்காக கானா பாடல் கேட்டால் சொந்தமாக எழுதி நீங்களே பாடுவீர்களா என்று கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு கானா வினோத் கூறியதாவது, விஜய் சாரே என்னை நேரில் அழைத்து அவரது கட்சிக்காக ஒரு அரசியல் பாடல் பாடச் சொன்னால் கண்டிப்பாக நான் பாட மாட்டேன்.
நான் பொதுவான ஒரு ஆள். பாட்டு பாடுவதுதான் என் தொழில். அவருக்காக நான் அரசியல் பாட்டு பாடினால் அது தனிப்பட்ட விஷயமாக மாறிவிடும். அந்த கட்சி அடையாளம் என் மீது வந்துவிடும். இதுவே அவர் நடிக்கும் படத்தில் ஒரு பாடல் பாடச் சொன்னால் கண்டிப்பாக பாடுவேன். அவரது கட்சிக்காக நான் எப்போதும் பாட மாட்டேன் என்று கானா வினோத் கூறியிருக்கிறார்.





