- Advertisement -
Homeபொழுதுபோக்குபடப்பிடிப்புகளில் அடிக்கடி பஞ்சாயத்து, வம்பு செய்யும் நடிகர் விஷ்ணு விஷால், அதிரடியாக படத்தை விட்டு விலகிய...

படப்பிடிப்புகளில் அடிக்கடி பஞ்சாயத்து, வம்பு செய்யும் நடிகர் விஷ்ணு விஷால், அதிரடியாக படத்தை விட்டு விலகிய இயக்குனர் – இது சரியில்லையே ப்ரோ!

- Advertisement -

தமிழ் சினிமாவில் ரசிகர்களின் மனம் கவர்ந்த நடிகராக இருப்பவர் விஷ்ணு விஷால். முக்கிய சில வெற்றி படங்களில் அவர் நடித்திருக்கிறார். வெண்ணிலா கபடிக்குழு படம் தமிழ் சினிமாவில் மூலம் அறிமுகமானவர். அந்த படத்தைத் தொடர்ந்து ஜீவா, ராட்சசன், முண்டாசுப்பட்டி, இன்று நேற்று நாளை, லால் சலாம், வேலைன்னு வந்துட்டா வெள்ளக்காரன், சிலுக்குவார்ப்பட்டி சிங்கம் உள்ளிட்ட படங்களில் நடித்தவர்

விஷ்ணு விஷால், லால் சலாம் படத்தில் நடித்த போது இயக்குனர் ஐஸ்வர்யா ரஜினிகாந்திடம், இந்த படத்தில் எனக்கு அதிக முக்கியத்துவம் உள்ள காட்சிகளை அதிகப்படுத்துங்கள், விக்ராந்தை விட நான்தான் பெரிய நடிகர். விக்ராந்த் சம்பந்தப்பட்ட காட்சிகளை குறையுங்கள் என்று அவர் சொன்னதாகவும், விக்ராந்துக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்தால் இந்த படத்தில் நான் நடிக்க மாட்டேன் என்று பிரச்னை செய்ததாகவும் தகவல் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.

- Advertisement -

ஆனால் படம் மிகப்பெரிய பிளாப் படமாக அமைந்தது. அதேபோல் சூட்டிங் ஸ்பாட்களில் 20க்கும் மேற்பட்ட பவுன்சர்களை அழைத்து வந்து அலப்பறை செய்வதும், வெட்டி பந்தா காட்டுவதுமாக பலமுறை அவர் அட்ராசிட்டி செய்ததாகவும் புகார் எழுந்தது. அதுவும் ரஜினி நடித்த லால் சலாம் படப்பிடிப்பிலேயே விஷ்ணு விஷால் அந்த மாதிரி நடந்துள்ளார்.

மேலும் விஷ்ணு விஷாலின் தந்தை இடம் வாங்கி தருவதாக கூறி நடிகர் சூரியிடம் இருந்து 3 கோடி ரூபாய் வரை மோசடி செய்ததாகவும், அதுகுறித்து சூரி சென்னை கமிஷனர் அலுவலகத்தில் சில ஆண்டுகளுக்கு முன் புகார் அளிக்க அது பெரிய பிரச்சனையானது. அதன்பிறகு சமீபத்தில் இருவரும் காம்ப்ரமைஸ் செய்து கொண்டதும் குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

சமீபத்தில் சத்யஜோதி பிலிம்ஸ் தயாரித்த ஒரு படத்தில் நடித்த விஷ்ணு விஷால், அந்த படத்தில் தயாரிப்பாளருடன் பிரச்சனை செய்ததால் அந்த படத்தில் இருந்து நடிக்காமல் வெளியேறினார். இப்போது சிங்கப்பூர் சலூன் என்ற படத்தை இயக்கிய டைரக்டர் கோகுல் இயக்கத்தில் விஷ்ணு விஷால் ஒரு படத்தில் நடித்து வந்தார். அந்த படத்தின் நடிப்பதுடன் அந்த படத்தையும் விஷ்ணு விஷால்தான் தயாரித்தார்.

இந்நிலையில் டைரக்டர் கோகுலை சுயமாக செயல்பட விடாமல், அடிக்கடி கதையில் குறுக்கீடு செய்து, பல்வேறு நெருக்கடிகளை கொடுத்துள்ளார். பொறுத்து பொறுத்து பார்த்த இயக்குனர் கோகுல் ஒரு கட்டத்தில், இந்த படத்தில் இருந்து விலகிவிட்டார். அதன் பிறகு வேறு ஒரு புதிய இயக்குனரை வைத்து இப்போது அந்த படத்தை விஷ்ணு விஷால் தயாரித்து அவரே நடித்தும் வருகிறார். இந்த படத்தை விஷ்ணு விஷாலுடன் ஐசரி கணேஷின் வேல்ஸ் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனமும் இணைந்து தயாரித்து வருகிறது. வளர்ந்து வரும் நடிகரான விஷ்ணு விஷால் இப்படி இயக்குனர், தயாரிப்பாளருடன் மோதலில் ஈடுபடுவது தமிழ் சினிமா வட்டாரத்தில் பலத்த அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.

- Advertisement -

சற்று முன்