- Advertisement -
Homeபொழுதுபோக்குதமிழக முதல்வர் விஜய் போட்ட அதிரடி உத்தரவு - உற்சாகத்தில் தமிழ் சினிமா ரசிகர்கள், இனி...

தமிழக முதல்வர் விஜய் போட்ட அதிரடி உத்தரவு – உற்சாகத்தில் தமிழ் சினிமா ரசிகர்கள், இனி திரையரங்குகளில் வாரம் முழுக்க ஒரே கொண்டாட்டம்தான்!

- Advertisement -

தமிழ்நாட்டில் உள்ள சினிமா தியேட்டர்களில் இதுவரை அனைத்து நாட்களிலும் தினமும் 4 காட்சிகள் திரையிடப்பட்டு வருகின்றன. தீபாவளி பொங்கல் போன்ற பண்டிகை கால விடுமுறை நாட்களில் மட்டும் சிறப்பு காட்சியுடன் சேர்த்து 5 காட்சிகள் என புதிய படங்கள் அரசு அனுமதியுடன் திரையிடப்பட்டு வந்தது. இப்போது தமிழக அரசு அதில் முக்கிய மாற்றம் கொண்டு வந்துள்ளது.

இனி புதிய தமிழ் படங்கள் வெளியிடப்படும் நாளில் இருந்து 7 நாட்களுக்கு தினசரி 5 காட்சிகள் திரையிட்டுக் கொள்ள முதல்வர் விஜய் அனுமதி வழங்கி உத்தரவிட்டு உள்ளார். நடிகர் விஜய் தமிழக முதல்வராக பொறுப்பேற்ற பிறகு சினிமாத் துறையை சேர்ந்த பல சங்கங்களை சார்ந்த நிர்வாகிகள் அவரை நேரில் சந்தித்து பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து வருகின்றனர்.

- Advertisement -

கடந்த மே 17ம் தேதி தமிழ் திரைப்பட துறையினர் சந்தித்து பல்வேறு கோரிக்கைகளை முதல்வர் விஜயிடம் வைத்தனர். முக்கியமாக தமிழ்நாடு முழுவதும் உள்ள திரையரங்குகளில் அனைத்து திரைப்படங்களையும் நாள் ஒன்றுக்கு 5 காட்சிகள் திரையிட அனுமதிக்கும்படி அவர்கள் கேட்டுக் கொண்டிருந்தனர்.

இதுபற்றி ஆலோசித்த முதல்வர் விஜய் சட்டப்படி தமிழ்நாடு திரையரங்குகள் ஒழுங்குமுறை விதிகளில் திருத்தம் மேற்கொண்டார். அதன்படி இனி தமிழ்நாட்டில் உள்ள அனைத்து திரையரங்குகளிலும் புதிதாக வெளியாகும் படங்கள் முதல் 7 நாட்கள் மட்டும் தினசரி 5 காட்சிகள் திரையிட்டுக் கொள்ள அனுமதி வழங்கியுள்ளார்.

- Advertisement -

மேலும் உள்ளூர் பண்டிகை நாட்கள் பொது விடுமுறை நாட்கள் சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் 5 காட்சிகள் திரையிட்டுக் கொள்ளவும் அவர் அனுமதி அளித்து உத்தரவிட்டுள்ளார். முதல்வர் விஜயின் இந்த உத்தரவு சினிமா ரசிகர்கள் மற்றும் திரையரங்கு உரிமையாளர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

இதுவரை புதிய படம் ரிலீஸானால் ஒரு நாள் மட்டுமே சிறப்பு காட்சியுடன் 5 காட்சிகள் திரையிட அனுமதி இருந்தது. அதுவும் பண்டிகை நாள் என்றால் மட்டுமே அரசின் அனுமதி பெற அவசியமில்லை. மற்ற நாட்களில் ரிலீஸ் என்றால் அரசு அனுமதி பெற விண்ணப்பிக்க வேண்டும். இப்போது எந்த நாளில் புதிய படம் ரிலீஸ் என்றாலும் ஒரு வாரம் அதாவது 7 நாட்களுக்கு தினமும் 5 காட்சிகள் திரையிட முதல்வர் விஜய் அனுமதி வழங்கி உத்தரவிட்டுள்ளார்.

- Advertisement -

சற்று முன்