இசைஞானி என்று புகழப்படும் இளையராஜா, இசையுலகில் தொடாத வெற்றிகளே கிடையாது, அவர் செய்யாத சாதனைகளும் கிடையாது. பல இயக்குனர்களை வாழவைத்தவர், பல ரசிகர்களின் வாழ்க்கையை தனது இசையால் அழகாக்கியவர், பலரது சோகங்களுக்கு மருந்தாக இருந்தவர். இவ்வாறு இளையராஜாவை குறித்த பெருமைகளுக்கு பஞ்சமே இல்லை.

ஆனால் சமீப காலமாகவே இளையராஜா பொது மேடைகளில் நடந்துகொள்ளும் விதம் பலருக்கும் அதிர்ச்சியை தருகிறது. திடீர் திடீர் என கோபப்படுகிறார். கோபப்பட்டு வார்த்தைகளை கொட்டிவிடுகிறார். இளையராஜாவின் இந்த போக்கு அவரது ரசிகர்களை கவலைக்குள்ளாக்குகிறது. அதே போல் சிலரிடம் கொஞ்சம் கர்வமாகவே பேசிவிடுகிறார். எனினும் எத்தனையோ சாதனைகளுக்கு சொந்தக்காரரான இளையராஜாவுக்கு கர்வம் இருப்பதில் தவறு இல்லை என்று பலரும் கூறுவது உண்டு.
இந்த நிலையில் பிரபல மருத்துவரும் சிவாஜி கணேசனுடன் நெருங்கி பழகியவருமான டாக்டர் காந்தராஜ், சமீபத்தில் ஒரு பேட்டியில் கலந்துகொண்டார். அப்போது அவர் இளையராஜாவை மிகவும் கடுமையாக விமர்சித்தார்.

“இளையராஜா விளம்பரத்திற்காகவே இவ்வாறு செய்கிறார். தினசரி பத்திரிக்கைகளில் எப்படியாவது ஒரு நடிகையை குறித்து செய்தி வராமல் போகாது. அது அந்த நடிகைக்கு ஒரு விளம்பரம். அதை போலவேதான் இளையராஜாவும் விளம்பரத்திற்காக இவ்வாறு செய்கிறார். இப்படி எதாவது செய்தால் ரசிகர்களின் பார்வை அவர் மீது விழும்” என்று கூறியுள்ளார். காந்தராஜ் இவ்வாறு கூறியது இணையத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் பேசிய அவர், “இளையராஜா தொடக்கத்தில் ஒரு கிறுஸ்துவர். தேவாலயங்களில் கோரஸ் பாடிக்கொண்டிருந்தார். இதை எல்லாம் மறைத்துக்கொண்டு தன்னை ஞானியாக காட்டிக்கொள்கிறார் இளையராஜா” என்று கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.





