- Advertisement -
Homeபொழுதுபோக்குஇந்தியன் 2 கொடுத்த பலத்த அடி, நடிகர் கமல் இயக்குனர் ஷங்கர் இணைந்து எடுத்த முக்கிய...

இந்தியன் 2 கொடுத்த பலத்த அடி, நடிகர் கமல் இயக்குனர் ஷங்கர் இணைந்து எடுத்த முக்கிய முடிவு – கண் கெட்ட பிறகு சூரிய நமஸ்காரமா என கலாய்க்கும் ரசிகர்கள்

- Advertisement -

தமிழ் சினிமாவில் வெளியான சில படங்கள், மிகப்பெரிய தோல்வியை சந்திக்கின்றன. அதுவும் பெரிய நடிகர்களின் படங்கள் அப்படி பிளாப் ஆகும்போது பெரிய அளவில் ரசிகர்களிடம் அது ரீச் ஆகி விடும். ரஜினி நடித்த சர்தார், கமல் நடித்த இந்தியன் 2, விஜய் நடித்த சுறா போன்ற படங்கள் இப்படி பெரிய ஏமாற்றத்தை தந்திருக்கின்றன.

அதுவும் ஏஆர் முருகதாஸ், இயக்குனர் ஷங்கர் போன்றவர்களின் படங்கள் இப்படி மொக்கையாக மாறும்போது ரசிகர்கள் மத்தியில் பலத்த ஏமாற்றம் ஏற்படும். அதுவும் ஷங்கர் போன்ற ஒரு இந்திய அளவில் கவனிக்கப்படும் இயக்குனர், உலக நாயகன் என புகழப்படும் கமல்ஹாசன் இணைந்து உருவாக்கிய இந்தியன் 2 படம், மிகப்பெரிய விமர்சனத்தை சந்தித்தது.

- Advertisement -

28 ஆண்டுகளுக்கு முன் வெளிவந்த இந்தியன் படம், இன்றும் ரசிகர்களால் விரும்பி ரசிக்கப்படும் ஒரு கிளாசிக் படமாக இருக்கிறது. அதில் காட்சிக்கு காட்சி திரைக்கதை, வசனங்கள், பாடல்கள், இசை என ஷங்கர் பார்த்து பார்த்து செதுக்கியது போல இயக்கியிருந்தார். ஒவ்வொரு கேரக்டரும் ரசிகர்களின் மனதில் அப்படியே நின்றது.

செருப்பு தைப்பவரின் மனைவியாக வரும் மனோரமா, டாக்டராக வரும் நிழல்கள் ரவி, கமலின் மகள் கஸ்தூரி, கருவூல அதிகாரியாக நடித்த பாலாசிங் என அவர்கள் வரும் காட்சிகள் சில நிமிடங்களே என்றாலும் அவர்களுக்கான நடிப்பு, படத்தின் கதையோட்டத்தில் மிக முக்கியத்துவம் பெற்றிருக்கும்.

- Advertisement -

அப்படிப்பட்ட ஒரு இந்தியன் படத்தை தந்துவிட்டு, இந்தியன் 2 படத்தை இப்படி தருவாரா ஷங்கர் என்பதே ரசிகர்களின் கோபமாக, எரிச்சலாக வெளிப்பட்டது. ஆனால் இப்போது இதில் இந்தியன் 3 படத்தை வரும் 2025ம் ஆண்டில் ஜனவரியில் ரிலீஸ் செய்ய முடிவு செய்திருந்த நிலையில், திடீர் மாற்றம் செய்துள்ளனர்.

கேம் சேஞ்சர் படத்தை முடித்த பிறகு இயக்குனர் ஷங்கரும், தக்லைப் படத்தை முடித்த பிறகு கமலும் இணைந்து, மீண்டும் இந்தியன் 3 படத்தில், பல மாற்றங்களை செய்து, அந்த காட்சிகளை ரி ஷூட் செய்து அதன்பிறகு மெதுவாக படத்தை வெளியிட முடிவு செய்துள்ளனர். அதனால் அடுத்த ஆண்டு ஏப்ரல் மே கோடை விடுமுறை காலத்தில் இந்தியன் 3 ரிலீஸ் தள்ளிப்போகலாம் என்று தெரிய வந்துள்ளது.

- Advertisement -

சற்று முன்