நடிகர் கமல்ஹாசன் விக்ரம் படத்துக்கு பிறகு தொடர்ந்து படங்களில் நடித்து வருகிறார். எனினும் விக்ரம் படத்துக்கு பிறகு அவரது படம் இதுவரை ஒன்றுகூட ரிலீஸ் ஆகாதது மிகப்பெரிய ஏமாற்றத்தை அவரது ரசிகர்களுக்கு தந்திருக்கிறது. எனினும் இந்தியன் 2, தக்லைப், இந்தியன் 3 மற்றும் கல்கி 2898 ஆகிய 4 படங்கள் கமல் நடிப்பில் அடுத்தடுத்து வெளிவர இருக்கின்றன.
இதில் இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் இந்தியன் 2 படத்தில், சேனாபதி என்ற இந்தியன் தாத்தா கேரக்டரில் கமல் வருகிறார். தக்லைப் படத்தில் மிகவும் வித்யாசமான தர லோக்கல் கேரக்டரில் கமல் நடித்துள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. ஆனால் அவரது கேரக்டர் என்னவென்று தெரியவில்லை.
பிரபாஸ் நாயகனாக நடித்துள்ள கல்கி படத்தில் கமல் வில்லன் கேரக்டரில் நடித்துள்ளார். இந்த படத்தில் நடிக்க கமலுக்கு ரூ. 150 கோடி சம்பளம் தரப்பட்டுள்ளது. கல்கி படத்தின் முதல் பாகம் வரும் 27ம் தேதி ரிலீஸ் ஆகிறது. இந்த படத்தில் 19 நிமிடங்கள் மட்டுமே கமல் வருகிறார். அதன்பிறகு 2வது பாகத்தில் அவர் நடித்த காட்சிகள் ஒன்றரை மணி நேரம் என்று கூறப்படுகிறது.
மணிரத்னம் இயக்கத்தில், 1986ம் ஆண்டில் கமல்ஹாசன் நடித்த படம் நாயகன். இந்த படத்தில் வேலு நாயக்கர் கேரக்டரில் நடித்து, முதன் முறையாக கமல் சிறந்த நடிகர் என்ற தேசிய விருது பெற்றார். அடுத்து மூன்றாம் பிறை, இந்தியன் படங்களுக்கு என இதுவரை 3 முறை தேசிய விருது பெற்றிருக்கிறார்.
நாயகன் படத்துக்கு பிறகு 38 ஆண்டுகள் கழித்து, மணிரத்னம் கமல்ஹாசன் இணைந்த தக்லைப் படத்துக்கு ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பு இருக்கிறது. ஆனால் வழக்கத்துக்கு மாறாக, மணிரத்னம் தனது ஸ்டைலை விட்டு முற்றிலும் விலகி, தரலோக்கல் அளவுக்கு இந்த படத்தை இயக்கி வருகிறார் என்ற தகவல் பரவி வருகிறது.
இந்நிலையில் நடிகர் கமலும், சிம்புவும் இந்த படத்தில் நடித்து வரும் நிலையில், இருவரும் ஒரு மதுபானக்கடை பாரில் ஒன்றாக குத்தாட்டம் போடும் ஒரு பாடல் நடன காட்சி இடம்பெற்றுள்ளது. இது, கமலும் பிரபுதேவாவும் காதலா காதலா படத்தில் ஆடிய காசுமேல காசு வந்து கொட்டுகிற நேரமிது பாடலை விட பலமடங்கு செம குத்தாட்டமாக இருப்பதாக கூறப்படுகிறது. 70 வயதை நெருங்குகிற நிலையில், இப்படி ஒரு ஆட்டத்தை கமல் போட்டிருக்காரே என ரசிகர்களே மிரண்டு போய்விடுவார்கள் என்ற தகவலும் வந்துள்ளது.





