தமிழ் தெலுங்கு மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் நடித்து ரசிகர்களின் மத்தியில் பெரிய வரவேற்பை பெற்றவர் கீர்த்தி சுரேஷ். தமிழில் பைரவா சர்கார் ரஜினி முருகன் ரெமோ சாமி 2 அண்ணாத்த நடிகையர் திலகம் தொடரி உள்ளிட்ட பல படங்களில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி ரசிகர்களை கவர்ந்தார்.
குறிப்பாக மறைந்த நடிகை சாவித்திரி தேவி பயோபிக்கில் நடிகையர் திலகம் படத்தில் கீர்த்தி சுரேஷ் மிகவும் அழகாக அழுத்தமாக தனது நடிப்பை வெளிப்படுத்தி இருந்தார். இந்த படம் தெலுங்கில் மகாநடி என்ற பெயரிலும் வெளியானது. இந்த படத்தில் நடித்த கீர்த்தி சுரேஷூக்கு சிறந்த நடிகை தேசிய விருது கிடைத்தது குறிப்பிடத்தக்கது.
நடிகர் ரஜினிகாந்துடன் அண்ணாத்த படத்தில் தங்கையாக கீர்த்தி சுரேஷ் நடித்திருந்தார். சிறுத்தை சிவா இயக்கத்தில் உருவான இந்த படம் சுமாரான வரவேற்பை மட்டுமே பெற்றது. ரஜினி படத்தில் நடிக்க வேண்டும் என்பதற்காக மணிரத்னம் இயக்கிய பொன்னியின் செல்வன் உள்ளிட்ட சில படங்களில் நடிக்கும் வாய்ப்பை மறுத்தவர் கீர்த்தி சுரேஷ் என்பதும் கவனிக்கத்தக்கது.
தமிழில் மட்டுமின்றி இந்தியிலும் அவர் தொடர்ந்து நடித்து வருகிறார். கடந்த ஆண்டில் ஆண்டனி தட்டில் என்ற தனது நீண்ட கால நண்பரை கீர்த்தி சுரேஷ் காதலித்து திருமணம் செய்துக்கொண்டார். நயன்தாரா ராஷ்மிகா மந்தனா சமந்தா வரிசையில் நடிகை கீர்த்தி சுரேஷூம் தொடர்ந்து படங்களில் பிஸியாக நடித்து வருகிறார்.
திருமணத்துக்கு முன்பு பேபி ஜான் என்ற இந்தி படத்தில் நடித்த கீர்த்தி சுரேஷூக்கு அந்த படம் எதிர்பார்த்த வெற்றியை தரவில்லை. தற்போது திருமணத்துக்கு பிறகு ரப்தார் என்ற இந்தி படத்தில் நடித்திருக்கும் கீர்த்தி சுரேஷ் முந்தைய படத்தின் தவற விட்ட வெற்றியை இந்த படத்தில் கண்டிப்பாக கைப்பற்றி விடுவேன் என்கிறார்.
முதலில் நடித்த பேபி ஜான் இந்தி படத்தில் கிளாமராக நடித்திருந்தேன். நான் இப்போது இந்த ரப்தார் படத்தில் சரியான பெர்பாஃமன்ஸ் நடிகையாக என்னுடைய தனித்திறமையை வெளிப்படுத்தி இருக்கிறேன் என்றும் நடிகை கீர்த்தி சுரேஷ் கூறியிருக்கிறார். திருமணத்துக்கு பிறகும் நடித்து வரும் கீர்த்தி சுரேஷூக்கு தொடர்ந்து பட வாய்ப்புகளும் வந்துக்கொண்டு இருக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது.





