- Advertisement -
Homeபொழுதுபோக்குஎன்ன ப்ரோ இது? இளையராஜா படிச்சாரா ஏஆர் ரகுமான் படிச்சாரா டெண்டுல்கர் படிச்சாரா? - அரசு...

என்ன ப்ரோ இது? இளையராஜா படிச்சாரா ஏஆர் ரகுமான் படிச்சாரா டெண்டுல்கர் படிச்சாரா? – அரசு விழாவில் பரபரப்பாக பேசிய லப்பர் பந்து பட இயக்குனர்!

- Advertisement -

சென்னையில் உள்ள நேரு உள் விளையாட்டு அரங்கத்தில் தமிழக அரசு சார்பில் கல்வி விழா சமீபத்தில் நடந்தது. இந்த விழாவில் தமிழக முதல்வர் ஸ்டாலின் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் மற்றும் திரைப்பட இயக்குனர்கள் மாரி செல்வராஜ் தமிழரசன் பச்சமுத்து நடிகர் சிவகார்த்தியேகன் உள்ளிட்ட பெற்றோர்கள் மாணவ மாணவியர் ஆசிரியர்கள் திரளாக கலந்துக்கொண்டனர்.

கல்வி விழாவில் கலந்துக்கொண்ட நடிகர் சிவகார்த்திகேயன் பேசுகையில், நான் பி இ மற்றும் எம்பிஏ என்ற 2 டிகிரிகள் படித்திருக்கிறேன். ஒருவேளை சினிமாவில் இருந்து என்னை வெளியே அனுப்பினாலும் என்னிடம் உள்ள 2 டிகிரிகளை வைத்து எப்படியாவது நான் பிழைத்துக்கொள்வேன். அந்த தைரியம் எனக்கு இருக்கிறது என்று கல்வி குறித்து பெருமையாக பேசினார்.

- Advertisement -

அடுத்து இந்த விழாவில் சிறப்பு விருந்தினராக பங்கேற்ற லப்பர் பந்து படத்தின் இயக்குனர் தமிழரசன் பச்சமுத்து பேசியதாவது, நான் அரசு பள்ளியில் படித்த மாணவன் தான். பஸ் பாஸ்சில் இருந்து முதல் தலைமுறை பட்டதாரி கல்வி உதவித்தொகை போன்ற பல சலுகைகளில் பொறியியல் முடித்த ஒரு மாணவன்.

நான் ஒரு மிடில் கிளாஸ். நகரத்தில் இருக்கும் மிடில் கிளாஸ் அல்ல. கிராமத்தில் இருக்கும் மிடில் கிளாஸ். நாங்கள் இட்லி கறி எல்லாம் ஞாயிற்றுக்கிழமைகளில் வாங்குபவர்கள் அல்ல. தீபாவளி பொங்கல் போன்ற பண்டிகை நாட்களில் மட்டுமே வாங்குபவர்கள். எனவே அரசின் இது போன்ற இலவசங்கள் எங்களுக்கு எவ்வளவு உதவியாக என்பதை நான் உணர்ந்தவன்.

- Advertisement -

ஒருவேளை சாப்பாட்டின் அருமை எனக்கு தெரியும். இன்று இந்த காலை உணவு திட்டத்தின் மூலம் 24 லட்சம் குழந்தைகள் சாப்பிடுகிறார்கள். இதனை கொண்டு வந்த முதல்வர் ஸ்டாலினுக்கு மிக்க நன்றி. பெரிய முதலாளிகளின் தேவைகளை மட்டுமே பூர்த்தி செய்யும் அரசாங்கத்துக்கு மத்தியில் பாமரர்களின் குழந்தைகளின் கோரிக்கைக்காக ஒரு திட்டத்தை நிறைவேற்றிய இந்த அரசுக்கு நான் நன்றி தெரிவிக்க விரும்புகிறேன்.

சச்சின் டெண்டுல்கர் படித்தாரா இளையராஜா படிச்சாரா ஏஆர் ரகுமான் படிச்சாரா என்று நிறைய பேர் கேட்பார்கள். அதையெல்லாம் நம்பாதீர்கள். அப்படி ஜெயித்தவர்கள் சிறு நூறு பேர்கள்தான். ஆனால் கல்வியால் ஜெயித்தவர்கள் தான் இங்கு அதிகம். நீங்கள் அதையே பின் தொடருங்கள். விதிவிலக்குகள் எப்போதும் உதாரணங்கள் ஆகாது என்று இயக்குனர் தமிழரசன் அந்த விழாவில் பரபரப்பாக பேசியிருக்கிறார்.

- Advertisement -

சற்று முன்