நடிகர் விக்ரம் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக உள்ளார். சியான் விக்ரம் என அழைக்கப்படும் அவர், நடிகர் கமல்ஹாசனுக்கு அடுத்த நிலையில் மிகச்சிறந்த நடிகராக ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றவர். இயக்குனர் பாலா இயக்கிய சேது படம்தான் விக்ரமின் அடையாளமாக அமைந்தது.
தொடர்ந்து காசி சாமி அந்நியன் ஐ ராவணன் பொன்னியின் செல்வன் போன்ற பல வெற்றிப் படங்களில் நடித்து இன்று முன்னணி நடிகராக விக்ரம் இருந்து வருகிறார். அவரது மகன் துருவ் விக்ரமும் ஆதித்ய வர்மா என்ற படத்தின் மூலம் நடிகராகி அறிமுகமாகி தொடர்ந்து நடித்து வருகிறார்.
பரியேறும் பெருமாள் கர்ணன் மாமன்னன் வாழை ஆகிய படங்களை இயக்கியவர் மாரி செல்வராஜ். சாதிய அடக்குமுறைகள், அதிகார வர்க்கத்தின் ஆணவப் போக்கு, எளிய மக்களின் வாழ்க்கை சிக்கல்களை மையப்படுத்திய கதைகளை இயக்குனர் மாரி செல்வராஜ் படமாக்கி வெற்றி பெற்று வருகிறார். இதில் மாமன்னன் படத்தில் வடிவேலுவை குணச்சித்திர வேடத்தில் நடிக்க வைத்திருந்தார்.
சமீபத்தில் இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் வெளியான படம் வாழை. இது அவரது வாழ்க்கையில் நடந்த சொந்த கதையாக இருந்தது. வாழை சுமை தூக்கி செல்லும் தொழிலாளர்கள் லாரியில் பயணித்த போது, அந்த லாரி கவிழ்ந்து விபத்தில் சிக்கி விடுகிறது. அதில் இவரது உறவினர்கள் அனைவருமே இறந்து விடுகின்றனர். அதில் உயிர் பிழைத்தவர் மாரி செல்வராஜ் மட்டும்தான்.
இப்போது மாரி செல்வராஜ் இயக்கத்தில் துருவ் விக்ரம் இயக்கத்தில் பைசன் என்ற படம் உருவாகி வந்தது. இதில் கபடி விளையாட்டு வீரராக துருவ் விக்ரம் நடித்திருந்தார். இதுவும் ஒரு கபடி வீரரின் வாழ்க்கையில் நடந்த உண்மை கதைதான். இதில் அனுபமா பரமேஸ்வரன் கலையரசன் ரெஜிஷா விஜயன் பசுபதி உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.
பைசன் படத்தை இயக்குனர் பா ரஞ்சித்தின் நீலம் புரடக்சன்ஸ் மற்றும் அப்ளாஸ் எண்டர்டெயின்மென்ட் நிறுவனம் ஆகியவை இணைந்து தயாரித்துள்ளன. இந்த படத்தின் படப்பிடிப்பு பல மாதங்களாக நடந்து வந்த நிலையில், லேட்டஸ்ட் தகவலின்படி பைசன் படப்பிடிப்பு முழுமையாக நிறைவடைந்துள்ளது. போஸ்ட் புரடக்சன்ஸ் பணிகள் விரைவில் துவங்கப்பட உள்ளன. இந்த படம் கோடை விடுமுறை காலத்தில் வரும் ஏப்ரல் அல்லது மே மாதம் ரிலீஸாக உள்ளது. அதற்கேற்ப ஏற்பாடுகள் வேகமாக நடந்து வருகின்றன.





