நடிகர் விஜய் நடித்த ஜனநாயகன் படம் வருகிற 2026ம் ஆண்டில் ஜனவரி 9ம் தேதி பொங்கலுக்கு ரிலீஸ் ஆகிறது. பெங்களூருவை சேர்ந்த கேவிஎன் புரடக்சன்ஸ் இந்த படத்தை தயாரித்துள்ளது. இயக்குனர் எச் வினோத் டைரக்ட் செய்திருக்கிறார். பீஸ்ட் படத்துக்கு பின் இந்த படத்திலும் விஜய்க்கு பூஜா ஹெக்டே ஜோடியாக நடித்திருக்கிறார். படத்துக்கு அனிருத் இசையமைத்துள்ளார்.
ஜனநாயகன் படம், தெலுங்கில் பாலகிருஷ்ணா ஹீரோவாக நடித்து கடந்த 2023ம் ஆண்டில் வெளிவந்த பகவந்த் கேசரி. இந்த படத்தை இயக்குனர் அனில் ரவிபுடி டைரக்ட் செய்திருந்தார். பெரிய வரவேற்பை பெற்ற பகவந்த் கேசரி என்ற படத்தின் ரீமேக் தான் ஜனநாயகன் என்ற தகவல் ஏற்கனவே வெளியாகி விட்டது.
ஆனாலும் அந்த படத்தை அப்படியே ஈயடிச்சான் காப்பியாக எடுக்காமல் கதையில் விஜய்க்கு ஏற்ப சில மாற்றங்களை செய்து, 70 சதவீதம் வரை அந்த படத்தின் கதையையும் மீதி 30 சதவீதம் தனது சொந்த சரக்கையும் கலந்து ஒரு ஜனரஞ்சகமான அரசியல் படமாக எச் வினோத் ஜனநாயகன் படத்தை உருவாக்கி இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
பகவந்த் கேசரி படத்தில் ஒரு காட்சியில் போலீஸ் அதிகாரியான பாலகிருஷ்ணா, ஒரு அமைச்சரை அவர் கட்சி கூட்டத்தில் இருக்கும்போது வந்து அடித்து உதைத்து கழுத்தில் துண்டு போட்டு இழுத்து செல்வது போன்ற காட்சி வருகிறது. அதே போன்ற ஒரு காட்சி ஜனநாயகன் படத்திலும் வருகிறது. அந்த காட்சியும் படமாக்கப்பட்டுள்ளது.
ஆனால் அது கட்சி கூட்டமாக இல்லாமல், அமைச்சரின் வீட்டுக்குள் புகுந்து விஜய் அந்த அமைச்சரை இழுத்து செல்வது போன்ற காட்சி எடுக்கப்பட்டுள்ளது. இதில் அமைச்சராக தமிழில் நடித்திருப்பவர் ஹாய் செல்லம் ஐ லவ்யூ மதுரை முத்துப்பாண்டி புகழ் நடிகர் பிரகாஷ் ராஜ்தான். அவரை தான் விஜய் அந்த காட்சியில் அடித்து இழுத்து போகிறார்.
ஆனால் ஏற்கனவே கில்லி படத்தில் திரிஷாவை இழுத்துச் செல்லும் பிரகாஷ் ராஜை அடித்து திரிஷாவை காப்பாற்றும் நடிகர் விஜய், ஒரு காட்சியில் பிரகாஷ் ராஜின் கழுத்தில் துண்டை போட்டு இழுத்துச் செல்வார். அதே போல் ஜனநாயகன் படத்திலும் காட்சி வந்தால் கில்லி படத்தை ரெபரென்ஸ் செய்த மாதிரி ஆகி விடும் என்பதால், நடிகர் விஜய் துண்டுக்கு பதிலாக கையில் உள்ள சவுக்கை பிரகாஷ் ராஜ் கழுத்தில் மாட்டி இழுத்து செல்கிறார். அப்போ தரமான சம்பவம்தான் என்று தளபதி ரசிகர்கள் குதூகலத்தில் உள்ளனர்.





