- Advertisement -
Homeபொழுதுபோக்குசஞ்சய் தத் பிறந்தநாளான இன்று லியோ படத்தின் முக்கிய கிளிப்பை வெளியிட்டு வாழ்த்து தெரிவித்த -...

சஞ்சய் தத் பிறந்தநாளான இன்று லியோ படத்தின் முக்கிய கிளிப்பை வெளியிட்டு வாழ்த்து தெரிவித்த – லோகேஷ் கனகராஜ்

- Advertisement -

தமிழ் திரையுலகின் முன்னணி இயக்குனராக வளர்ந்து வரும் லோகேஷ் கனகராஜின் அடுத்த படமாக “லியோ” உருவாகியுள்ளது. முற்றிலுமாக படப்பிடிப்பு முடிவடைந்துள்ள வேளையில் தற்போது இந்த படத்திற்கான போஸ்ட் ப்ரொடக்சன் பணிகள் நடைபெற்று வருகின்றன. எதிர்வரும் அக்டோபர் 19-ஆம் தேதி இந்த படமானது உலகெங்கிலும் வெளியாகயுள்ள வேளையில் இந்த படத்தின் இசை வெளியீட்டு விழாவும் கூடிய விரைவில் நடைபெறும் என்று கூறப்படுகிறது.

Sanjay-Dutt-1

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய், த்ரிஷா, அர்ஜுன், சஞ்சய்தத், ப்ரியா ஆனந்த், மன்சூர் அலிகான், மிஷ்கின், கௌதம் மேனன், சாண்டி மேத்யூ தாமஸ் என பல்வேறு நட்சத்திரங்கள் நடித்துள்ள இந்த படமானது ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்ப்பை பெற்றுள்ளது.

- Advertisement -

ஏற்கனவே இந்த படத்தின் ஒரு பாடல் வெளியாகி அனைவரது மத்தியிலும் கவனத்தை ஈர்த்துள்ள வேளையில் படக்குழு ஒவ்வொரு அப்டேட்டாக சிறிய இடைவெளிகளில் வெளியிட்டு ரசிகர்களிடையே இந்த படத்தின் மீதான ஆர்வத்தையும் தூண்டி வருகின்றனர். அந்த வகையில் இன்று நடிகர் சஞ்சய் தத் தனது 64-வது பிறந்த நாளை கொண்டாடி வருவதால் அவரது பிறந்த நாளை முன்னிட்டும் ஒரு முக்கிய அப்டேட் வெளியாகியுள்ளது.

- Advertisement -

இந்த அப்டேட்டில் சஞ்சய் தத்க்கு பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவிப்பதோடு மட்டுமின்றி ரசிகர்களுக்கும் ஒரு முக்கிய விடயத்தினை படத்தின் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் பகிர்ந்துள்ளார். அந்த வகையில் இந்த படத்தில் சஞ்சய் தத்தின் கதாபாத்திரம் எவ்வாறு அமைந்துள்ளது என்பதை காண்பிக்கும் விதமாக “ஆன்டனி தாஸ்” என்கிற பெயரில் ஒரு கிளிப்பிங்கை லோகேஷ் கனகராஜ் வெளியிட்டுள்ளார்.

அதில் சஞ்சய் தத் லியோ படத்தில் எவ்வாறு வரப்போகிறார் என்பது குறித்து 37 நொடிகள் கொண்ட முன்னோட்டமாக ஒரு வீடியோ இடம்பெற்றுள்ளது. இந்த வீடியோவை பகிர்ந்த லோகேஷ் கனகராஜ் “மீட் ஆன்டனி தாஸ்” எங்களிடம் இருந்து உங்களுக்கு ஒரு சிறிய கிப்ட் இதுதான். உங்களுடன் வேலை செய்ததில் மிகவும் மகிழ்ச்சி என பிறந்தநாள் வாழ்த்துக்களை லோகேஷ் கனகராஜ் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

சற்று முன்