- Advertisement -
Homeபொழுதுபோக்குஃபிரண்ட்ஸ், காவலன் பட இயக்குனருக்கு நெஞ்சு வலி... தீவிர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டுள்ளதால் சோகத்தில் ரசிகர்கள்...

ஃபிரண்ட்ஸ், காவலன் பட இயக்குனருக்கு நெஞ்சு வலி… தீவிர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டுள்ளதால் சோகத்தில் ரசிகர்கள்…

- Advertisement -

இந்திய சினிமாவில் மிக முக்கியமான இயக்குனர்களில் ஒருவராக அறியப்படுபவர் சித்திக். மலையாள உலகைச் சேர்ந்த இவர், தனது தாய்மொழி மட்டும் இன்றி தமிழ், தெலுங்கு, ஹிந்தி ஆகிய மொழிகளிலும் படங்களை இயக்கியுள்ளார். 1989ஆம் ஆண்டு வெளியான, ராமோஜி ராவ் ஸ்பீக்கிங் என்னும் திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அவர் அறிமுகமானார்.

இதைத்தொடர்ந்து காட்பாதர், வியட்நாம் காலனி, கபூலிவாலா என சித்திக் இயக்கிய அத்தனை திரைப்படங்களும், மலையாளத்தில் சூப்பர் டூப்பர் வெற்றி பெற்றன. இந்திய அளவில் கவனிக்கத்தக்க இயக்குனராக உருவெடுத்த அவர், விஜய் மற்றும் சூர்யாவை வைத்து தமிழில் ஃபிரண்ட்ஸ் திரைப்படத்தை எடுத்தார்.

- Advertisement -

2001ஆம் ஆண்டு பொங்கல் பண்டிகையின்போது வெளியான இந்த திரைப்படம், மிகப்பெரிய வெற்றியை பெற்றது. எப்போதும் நகைச்சுவைக்கு என தனி முக்கியத்துவம் கொடுக்கும் சித்திக், இந்த படத்தில் ரசிகர்களை வயிறு குலுங்க சிரிக்க வைத்தார். நேசமணி கதாபாத்திரத்தில் வடிவேலுவும், கோபாலு கதாபாத்திரத்தில் சார்லியும் படத்தில் வாழ்ந்து திரையரங்குகளை அலறவிட்டனர்.

இன்றைய நாள் வரைக்கும், வடிவேலுவின் நேசமணி கதாபாத்திரத்திற்கு என ஒரு ரசிகர் பட்டாளமே உள்ளது. படத்தின் முதல் பாதியில் அவர் அள்ளித் தெளித்த காமெடிகளால், இன்று வரை ரசிகர்கள் சிரித்துக் கொண்டிருக்கின்றனர். பிரண்ட்ஸ் என்னும் ஒரு திரைப்படத்தை கொடுத்ததற்கே, சித்திக்கை எவ்வளவு பாராட்டினாலும் தகும் என்று இன்றும் ரசிகர்கள் கூறி வருகின்றனர்.

- Advertisement -

பிரண்ட்ஸ் வெற்றிக்கு பிறகு, மீண்டும் தமிழில் படம் எடுக்க எண்ணிய சித்திக், விஜயகாந்த் உடன் இணைந்து எங்கள் அண்ணா படத்தை உருவாக்கினார். அண்ணன் தங்கை பாசத்துடன், அல்டிமேட் காமெடி இந்த படத்திலும் இடம்பெற, திரையரங்குகள் திருவிழா கோலம் பூண்டன. மலையாளத்தில் பாடிகார்ட் படத்தை இயக்கிய சித்திக், அதனை தமிழில் காவலன் என்னும் பெயரில் விஜய்யை வைத்து இயக்கினார். இதிலும் வடிவேலு காமெடி பட்டாசு ரகமாய் இருந்தது. இதையடுத்து மலையாளத்தில் பாஸ்கர் தி ராஸ்கல், மோகன்லாலுடன் பிக் பிரதர் உள்ளிட்ட திரைப்படங்களை அவர் இயக்கினார்.

இந்த நிலையில் 69 வயதான சித்திக், திடீரென நெஞ்சுவலி காரணமாக கொச்சியில் உள்ள மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். அவருக்கு அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. ஏற்கனவே குடல் பிரச்சனையால் அவதிப்பட்ட வந்த அவருக்கு திடீரென நெஞ்சு வலி ஏற்பட்டதாகவும், எக்மோ கருவியின் உதவியுடன் அவர் சுவாசித்து வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. அவர் விரைவில் குணமடைய வேண்டும் என்று திரையுலகினர் பிரார்த்தித்து வருகின்றனர்.

- Advertisement -

சற்று முன்