- Advertisement -
Homeபொழுதுபோக்கு35 வயதாகியும் ஏன் திருமணமாகவில்லை? குட் நைட் பட நாயகன் மணிகண்டன் அளித்த பதில் -...

35 வயதாகியும் ஏன் திருமணமாகவில்லை? குட் நைட் பட நாயகன் மணிகண்டன் அளித்த பதில் – விவரம் இதோ

- Advertisement -

தமிழ் திரையுலகில் வளர்ந்து வரும் இளம் கதாநாயகர்களில் ஒருவரான மணிகண்டன் துணை கதாபாத்திரங்களில் விக்ரம் வேதா, ஜெய் பீம் போன்ற படங்களில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி ரசிகர்கள் மத்தியில் வரவேற்பினை பெற்றிருந்தார். அதற்கடுத்து அவர் முதல் முறையாக கதாநாயகனாக களமிறங்கிய குட் நைட் படம் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பினை பெற்றது.

mani

அதற்கு அடுத்து மணிகண்டனின் திறமையான நடிப்பினை பார்த்து பல்வேறு இயக்குனர்களும் அவரிடம் கதையை கூறி வருகின்றனர். இந்நிலையில் அடுத்தடுத்த படங்களின் கதை தேர்வில் தீவிரமாக இருக்கும் மணிகண்டன் நல்ல கதைகளை தேர்ந்தெடுத்து நடிப்பதற்காக காத்திருக்கிறார்.

- Advertisement -

சமீபத்தில் அவரது நடிப்பில் வெளியான “குட் நைட்” திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பினை பெற்றது மட்டுமின்றி வசூல் ரீதியாகவும் பெரிய வெற்றியடைந்தது. இதன் காரணமாக அடுத்த படத்தின் கதை தேர்வில் தீவிரமாக இருக்கும் மணிகண்டன் தற்போது குட் நைட் படத்தின் வெற்றிக்குப் பிறகு அந்த தயாரிப்பு நிறுவனத்தின் பேனரிலேயே மற்றொரு படத்தில் கதாநாயகனாக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.

Mani-1

புதுமுக இயக்குனர் பிரபுராம் வியாஸ் என்பவரின் இயக்கத்தில் அடுத்ததாக மணிகண்டன் நடிக்க இருக்கும் படம் விரைவில் துவங்க இருக்கிறது. அந்த படத்தில் நடிக்கப்போகும் நடிகர்கள் குறித்த எதிர்பார்ப்பும் தற்போது ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது. இந்நிலையில் 35 வயதான மணிகண்டன் இன்றளவும் திருமணம் செய்யாதது ஏன்? என்று ஒரு கேள்வி அவரிடம் எழுப்பப்பட்டது.

- Advertisement -

அதற்கு பதிலளித்த மணிகண்டன் கூறுகையில் : இந்த கேள்வியை எங்க அம்மா கேட்க சொன்னாங்களா? அதற்கு காரணம் நான் மென்டலி இன்னும் திருமணத்திற்கு தயாராகவில்லை. எப்பொழுது எனக்கு சரி என்று தோன்றுகிறதோ அப்போது திருமணம் செய்து கொள்வேன் என்று பதில் கூறியிருக்கிறார். அவரது இந்த பேட்டி தற்போது இணையத்தில் வைரலாகி வருவது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

சற்று முன்