- Advertisement -
Homeபொழுதுபோக்குகிஸ் திரைப்படத்தின் டைட்டிலை கொடுத்ததே அந்த இயக்குனர்தான்... ரகசியத்தை பகிர்ந்த நடிகர் கவின்...

கிஸ் திரைப்படத்தின் டைட்டிலை கொடுத்ததே அந்த இயக்குனர்தான்… ரகசியத்தை பகிர்ந்த நடிகர் கவின்…

- Advertisement -

சின்னத்திரையில் இருந்து வெள்ளி திரைக்கு வந்த கவினுக்கு ஹீரோவாகும் வாய்ப்பு லிப்ட் திரைப்படத்தின் மூலம் கிடைத்தது. ஹாரர் ஜானரில் எடுக்கப்பட்ட அந்த திரைப்படம், வசூல் ரீதியாக பெரிய அளவு தாக்கத்தை ஏற்படுத்தவில்லை என்றாலும் விமர்சன ரீதியாக வரவேற்பை பெற்றது. இப்படியான சூழலில் தான் கவினுக்கு அடுத்த திரைப்படமாக வெளிவந்தது டாடா.

தமிழ் சினிமா பார்த்து பழகிப்போன கதை என்றாலும் அதை எடுத்த விதம் மிக நன்றாக இருந்ததால் டாடா திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை ருசித்தது. குறிப்பாக தனது முதிர்ச்சியான நடிப்பில் கலக்கி இருந்தார் கவின். வெள்ளி திரைக்கு ஏற்றது போலவே தனது பாவனைகளை மாற்றி அவர் அப்லாஸ் பெற்றார்.

தந்தைக்கும் மகனுக்கும் இடையேயான உறவையும், காதலித்து திருமணம் செய்து கொண்ட தனது மனைவியை ஒரு பிரிவிற்குப் பிறகு பார்க்கும் பொழுது ஏற்படும் ஏக்கத்தையும் தன் கண்முன்னே காட்டி இருந்தார் கவின். இப்படி டாடா திரைப்படம் பல தரப்பினராலும் பாராட்டைப் பெற்றதால், அவரது அடுத்த திரைப்படம் குறித்து பலரது பார்வையும் திரும்பியது.

இதில் இயக்குனர் இளனுடன் அவர் இணைந்து பணியாற்றிய ஸ்டார் திரைப்படம் பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியானது. காரணம் அந்த திரைப்படத்தின் டிரைலர் தான். பார்ப்பதற்கு பக்காவாக இருந்த அந்த ட்ரெய்லர் பலருக்கும் எதிர்பார்ப்பை தூண்டி விட, படம் என்னவோ கலவையான விமர்சனத்தையே பெற்றது.

அடுத்ததாக இயக்குனர் நெல்சன் தயாரிப்பில் கவின் நடித்த பிளடி பெக்கர் திரைப்படம் கடந்த தீபாவளிக்கு வெளியானது. பிச்சைக்காரன் கெட்டப்பில் கவின் நடித்திருந்ததால் இதன் மீது எதிர்பார்ப்பு அதிகரித்தது. ஆனால் அது எல்லாம் அந்த திரைப்படத்தின் ஓட்டத்திற்கு பொருந்தவில்லை. இப்படி தொடர்ந்து இரண்டு திரைப்படங்கள் விமர்சனத்திற்கு உள்ளானதால் அடுத்தடுத்து வெற்றி திரைப்படங்களை கொடுக்க வேண்டிய கட்டாயத்தில் கவின் இருக்கிறார்.

இப்படியான சூழலில்தான் கவினுக்கு கிஸ் திரைப்படம் வெளியாகிறது. நடன இயக்குனர் சதீஷ் இதனை இயக்கியிருக்கிறார். இது தொடர்பான பேட்டியில் பேசிய கவின், இந்த திரைப்படத்தின் டைட்டில் உரிமை மிஸ்கின் சாரிடம் தான் இருந்தது. எங்கள் படத்திற்கு அது தேவைப்பட்டதால் நடன இயக்குனர் சதீஷ் மிஸ்கின் சாரிடம் சென்று கேட்டார். உனக்கு எதுக்குடா இந்த டைட்டில் என்று கேட்ட மிஸ்கின் சார், படத்தின் கதையைக் கேட்டதும் எங்களுக்கு கொடுத்துவிட்டார் என்று தெரிவித்துள்ளார்.

சற்று முன்