தமிழ் சினிமாவில் கதாநாயகிகளாக அறிமுகமாகும் சில நடிகைகள், மார்க்கெட்டை தக்க வைத்துக்கொள்ள அடுத்த சில படங்களிலேயே கவர்ச்சிக்கு மாறிவிடுகின்றனர். அரைகுறை ஆடைகளில், குத்தாட்டம் போடுகின்றனர். இன்று பெரிய ஸ்டார் நடிகைகளான நயன்தாரா, திரிஷா போன்றவர்களே கூட அந்த வகையில் வந்தவர்கள்தான்.
இப்படி கதாநாயகிகளே, கவர்ச்சி நாயகிகளாக மாறிவிடும் ஒரு பேஷனை உருவாக்கி விட்டவர் நடிகை குஷ்புதான். அதுவரை இதுபோன்ற கவர்ச்சி குத்தாட்டங்களுக்காக பிற நடிகைகள்தான் கமிட் செய்யப்பட்டனர். ஆனால் குஷ்பு அந்த டிரண்டை உடைத்தெறிந்து புதிய புரட்சியை ஏற்படுத்தினார்.
அதற்கு பிறகு வந்த ரோஜா, மீனா, ரம்பா, சிநேகா, நயன்தாரா, திரிஷா போன்றவர்களும் அதையே பின்பற்றி தங்களது மார்க்கெட்டை வலுவாக தக்க வைத்துக்கொண்டனர். அந்த வரிசையில்தான் நமீதாவும் தூக்கலான கவர்ச்சியை காட்டி ரசிகர்களை, தன்வசப்படுத்தினார். ஒரு காலகட்டத்தில் தனது கவர்ச்சி வெள்ளத்தில் ரசிகர்களை மூழ்கடித்தார் என்றால் அது மிகையல்ல.
அர்ஜூனா அர்ஜூனா பாடல் காட்சியில், கொட்டும் அருவியில், சரத்குமாருடன் வளைந்து, நெளிந்து நடனமாடி ரசிகர்களை கிறங்கடித்த நமீதா, கவர்ச்சிக்காக மட்டுமே படங்களில் கமிட் செய்யபப்ட்டார். அப்படி தான் ஏய், நான் அவன் இல்லை, ஜகன் மோகினி, புலி முருகன், அழகிய தமிழ் மகன், இங்கிலீஸ்காரன், பச்சக்குதிர, மகாநடிகன் போன்ற படங்களை சொல்லலாம்.
ஒரு கட்டத்தில், கவர்ச்சியில் முதிர்ச்சி தட்டிய நிலையில் நமீதா, சினிமாவில் இருந்து அரசியல் பக்கம் ஒதுங்கினார். பாரதிய ஜனதா கட்சியில் சேர்ந்த அவர், அந்த கட்சியில் ஒரு முக்கிய பொறுப்பில் இருக்கிறார். பாஜக கூட்டங்களில் கலந்துக்கொள்கிறார். தேர்தல் நேரத்தில் தீவிர பிரசாரமும் செய்கிறார்.
சென்னையில், துரைப்பாக்கத்தில் தனது கணவர் மற்றும் 2 பிள்ளைகளுடன் வசித்து வரும் நமீதா, இப்போது மழைவெள்ளத்தில் சிக்கியுள்ளார். ஒரு காலத்தில் கவர்ச்சி வெள்ளத்தில் ரசிகர்களை சந்தோஷப்படுத்திய அவர், இன்று மழைவெள்ளத்தில் சிக்கி துன்பப்படுவதாக, சமூக வலைதளங்களில் தகவல் வைரலாகி வருகிறது. அவரது வீட்டுக்குள் மழை வெள்ளம் புகுந்து விட்டதால், உதவிக்கு யாருமின்றி அவர், தனது பிள்ளைகள், கணவருடன் தவிப்பதாக கூறப்படுகிறது.





