- Advertisement -
Homeபொழுதுபோக்குஒரு கையில் அரிவாள்... மறு கையில் வேல் கம்பு... போருக்கு தயாரான நயன்தாரா... போஸ்டர் மூலம்...

ஒரு கையில் அரிவாள்… மறு கையில் வேல் கம்பு… போருக்கு தயாரான நயன்தாரா… போஸ்டர் மூலம் மீண்டும் தனுஷை சீண்டினாரா

- Advertisement -

தமிழ் சினிமாவில் மூத்த நடிகைகளாக இருக்கும் நயன்தாரா அவ்வபோது கதாநாயகிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் திரைப்படங்களிலும் நடித்து வருகிறார். ஆனால் இதில் பெரும்பாலான திரைப்படங்கள் படுதோல்வியையே சந்தித்து இருக்கின்றன. கோலமாவு கோகிலா, அறம், மாயா உள்ளிட்ட திரைப்படங்கள் மட்டும் நயன்தாராவுக்கு வெற்றியை கொடுத்தன.

 

- Advertisement -

அதன்பிறகு அவர் நடித்த பெரும்பாலான திரைப்படங்கள் படுதோல்வியை சந்தித்தன. இருப்பினும் வெற்றியை எப்படியாவது கொடுத்து விட வேண்டும் என்ற முனைப்பில் நயன்தாரா தொடர்ந்து கதாநாயகிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் திரைப்படங்களில் நடித்து வருகிறார்.

 

- Advertisement -

இந்த நிலையில், தனது திருமண டாக்குமென்ட்ரி திரைப்படம் வெளியாவதற்கு முன்பு தனுசுக்கு எதிராக பரபரப்பு அறிக்கையை அவர் வெளியிட்டு இருந்தார். அதில் நானும் ரவுடிதான் திரைப்படம் தொடர்பான காட்சிகளை தனது டாக்குமெண்டரியில் பயன்படுத்த முடியவில்லை என்றும், தனுஷ் என்ஓசி சான்றிதழ் தராமல் இரண்டு ஆண்டுகள் இழுத்தடித்ததே இதற்கு காரணம் என்றும் அவர் பொங்கி இருந்தார்.

 

அது மட்டுமல்லாமல் தனுசை மிகக் கடுமையான வார்த்தைகளால் அவர் பேசியிருந்தார். ஜெர்மனியில் ஒரு வார்த்தையை கூறி அதற்கு அர்த்தம் நீங்கள் தான் என்று குறிப்பிட்டிருந்தார் நயன்தாரா. பிறர் துன்பங்களை பார்த்து சிரிப்பவர் என பொருள்படும் அந்த வார்த்தை மிகவும் பரபரப்பை கூட்டியது. ஒரு என்ஓசி சர்டிபிகேட் தராததற்காக தனுஷை இந்த அளவுக்கு அவர் டார்கெட் செய்ய வேண்டுமா என்று பலரும் கேள்வி எழுப்பினர்.

 

அது மட்டுமல்ல தனது திருமண டாகுமெண்டரி படத்திற்கான பரபரப்பை உண்டு பண்ணுவதற்காக தான் நயன்தாரா தனுசை திட்டி இருக்கிறார் என்றும் பலர் பேசினர். ஆனால் இதற்கு தனுஷ் எந்தவித பதிலும் அளிக்கவில்லை. தனது இட்லி கடை மற்றும் நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் திரைப்படங்களில் அவர் கவனம் செலுத்த சென்று விட்டார். விடுதலை படத்தின் இரண்டாம் பாகத்திலும் ஒரு பாடலை பாடியிருக்கிறார்.

 

இதனிடையே, தனது பிறந்தநாளில் நயன்தாராவின் புதிய திரைப்படம் குறித்த போஸ்டர் மற்றும் வீடியோ வெளியானது. போஸ்டரில், she declares war என்று குறிப்பிடப்பட்டிருந்தது. டைட்டில் தொடர்பான வீடியோவில், அவர் வேல் கம்பு மற்றும் அரிவாள் வைத்து எதிரிகளை துடிக்க துடிக்க வெட்டுவது போன்ற காட்சிகளும் இடம் பெற்றிருந்தன. படத்திற்கு ராக்காயி என டைட்டில் வைக்கப்பட்டுள்து.

- Advertisement -

சற்று முன்