- Advertisement -
Homeபொழுதுபோக்குலோகேஷ் கனகராஜை தொடர்ந்து நடிகராக களத்தில் குதித்த பிரபல இயக்குனர், அதுவும் வெற்றிமாறன் படத்தில்…...

லோகேஷ் கனகராஜை தொடர்ந்து நடிகராக களத்தில் குதித்த பிரபல இயக்குனர், அதுவும் வெற்றிமாறன் படத்தில்… – போட்றா வெடிய… சம்பவம் வேற லெவல்தான்!

- Advertisement -

நடிகர் சிம்பு நடிக்கும் அடுத்த படத்தை இயக்குனர் வெற்றிமாறன் டைரக்ட் செய்கிறார். இந்த படம் வடசென்னை படத்தின் 2ம் பாகமாக உருவாகிறது. வருகிற ஜூலை மாதம் 16ம் தேதி இந்த படத்தின் படப்பிடிப்பு எண்ணூர் பகுதியில் துவங்க உள்ளது. படத்துக்கான ப்ரீ புரடக்சன்ஸ் பணிகள் இப்போது வேகமாக நடந்து வருகின்றன.

நடிகர் தனுஷ் நடிக்க வேண்டிய வடசென்னை 2ம் பாகத்தில்தான் நடிகர் சிம்பு நடிக்கிறார் என்பது கவனிக்கத்தக்கது. ஆனால் அதே நேரத்தில் வடசென்னை முதல் பாகத்திலேயே நாயகனாக நடிக்க இருந்தவர் நடிகர் சிம்புதான். அவரை நாயகனாக மனதில் வைத்துதான் வெற்றிமாறன் வடசென்னை படத்தின் கதையை எழுதினார்.

- Advertisement -

ஆனால் அன்றைய காலகட்டத்தில் சிம்புவுக்கு இருந்த பல கமிட்மென்டுகள் காரணமாக வடசென்னை படத்தில் சிம்பு நடிக்க முடியாமல் போனது. அதன்பிறகுதான் வடசென்னை படத்தில் நடிகர் தனுஷ், சிம்பு நடிக்க வேண்டிய கேரக்டரில் நடித்திருந்தார். படமும் மாஸ் ஹிட் ஆனது.

விடுதலை விடுதலை 2 படங்களுக்கு பிறகு வாடிவாசல் படத்தை தான் வெற்றிமாறன் இயக்க திட்டமிட்டு இருந்தார். ஆனால் சூர்யா போட்ட ஏகப்பட்ட கண்டிசன்களால் விரக்தியடைந்த வெற்றிமாறன் அந்த படமே வேண்டாம் என்ற முடிவுக்கு வந்து டிராப் செய்துவிட்டார். அதே வேளையில் தாணு தயாரிக்கும் சிம்பு படத்தை வடசென்னை 2 படமாக உருவாக்க களத்தில் இறங்கி விட்டார்.

- Advertisement -

இந்நிலையில் வடசென்னை 2 படத்தில் சிம்புவுடன் முக்கிய கேரக்டரில் இயக்குனர் நெல்சன் திலீப்குமார் நடிப்பதாக ஒரு முக்கிய தகவல் வெளியாகி உள்ளது. படப்பிடிப்பு தளத்தில் வெளியான புகைப்படங்கள் மூலம் இந்த தகவல் உறுதி செய்யப்பட்டுள்ளது. வெற்றிமாறன் படப்பிடிப்பு குழுவினர் மத்தியில் நெல்சனும் இருப்பது அந்த புகைப்படத்தில் உறுதியாகி உள்ளது.

இயக்குனர்கள் நடிகர்களாவது தமிழ் சினிமாவில் புதிது அல்ல. இயக்குனர் லோகேஷ் கனகராஜ் அடுத்ததாக அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் ஒரு புதிய படத்தில் நடிக்கிறார். அதே போல் வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாகும் வடசென்னை 2 படத்தில் சிம்புவுடன் முக்கிய கேரக்டரில் நெல்சனும் நடிகராக அறிமுகமாகிறார். கேமியோ ரோல் ஆக இருந்தாலும் அவரை நிச்சயமாக பேசும் ஒரு கேரக்டராகவே வெற்றிமாறன் அவரை காட்டுவார் என்பதில் சந்தேகம் இல்லை.

- Advertisement -

சற்று முன்