- Advertisement -
Homeபொழுதுபோக்குமணிரத்னம் அத்தனை பேரை காலி செய்திருக்கிறார்.. என்ன தயாரிப்பாளர் இப்படி சொல்லிட்டாரு?

மணிரத்னம் அத்தனை பேரை காலி செய்திருக்கிறார்.. என்ன தயாரிப்பாளர் இப்படி சொல்லிட்டாரு?

- Advertisement -

மணிரத்னம் இந்திய சினிமாவின் அடையாளங்களில் ஒருவர். இப்போது எல்லோரும் பான் இந்தியா படங்கள் எடுத்துக்கொண்டிருக்க அவரோ 90களிலேயே பான் இந்தியா படங்களை எடுத்தவர். அவரது இயக்கத்தில் கடைசியாக பொன்னியின் செல்வன் 2 வெளியானது. தற்போது கமல் ஹாசனை வைத்து தக் லைஃப் என்ற படத்தை இயக்கிவருகிறார்.

மணிரத்னத்துக்கு என்று இந்தியா முழுவதும் ரசிகர்கள் இருக்கின்றனர். அதிலும் திரையுலகை சேர்ந்தவர்கள் அவர் மீது மிகுந்த மரியாதை வைத்திருப்பார்கள். இந்நிலையில் தயாரிப்பாளர் மாணிக்கம் நாராயணன் ஒரு யூட்யூப் சேனலுக்கு அளித்த பேட்டியில் மணிரத்னத்தை விளாசி தள்ளியிருக்கிறார். அவர் கொடுத்த பேட்டியில், “சினிமா என்பது மிகப்பெரிய மோகம். இந்தப் படத்தில் வெல்லலாம் அடுத்த படத்தில் வெல்லலாம் என்றுதான் பார்க்குமே தவிர அதில் இருக்கும் முள் எப்போதும் தெரியாது. அதில் இருக்கும் ரோஜா மட்டும்தான் கண்ணுக்கு தெரியும்.

- Advertisement -

கதை எவ்வளவு நன்றாக இருந்தாலும் படம் ஓடாது. தெரிந்த முகமாக இருந்தால் மட்டும்தான் படம் ஓடும். யாரோ ஒருவரை போட்டு படத்தை எடுத்துவிடலாம் என்று நினைத்தால் அந்தப் படம் ஓடாது. அது அவ்வளவுதான். மக்களுக்கு படம் பிடித்திருக்க வேண்டும். அப்போது மட்டுமே படம் ஓடும் என்பதை அடிபட்டுதான் நான் தெரிந்துகொண்டேன். விஜய்யை வைத்து நான் படம் தயாரித்திருக்கிறேன். இப்போதும் அவருக்கு என் மீது மரியாதை இருக்கிறது.

இன்று நிலைமை சரியில்லை என்பதற்காக நான் அவரிடம் சென்று டேட் வேண்டும் என்று பிச்சை எடுக்க முடியாது. அஜித்தைவிட விஜய்தான் பெட்டர் என்று நான் சொல்வேன். எல்லோரும் மணிரத்னத்தை கொண்டாடுகிறார்கள். ஆனால் அவர் எத்தனை பேரை காலி செய்திருக்கிறார் தெரியுமா. முக்கியமாக என்னை அவர் சாகடித்துவிட்டார்.

- Advertisement -

அவர் இயக்கிய கன்னத்தில் முத்தமிட்டால் படத்தால் நான் பெரிய கஷ்டத்தை அனுபவித்துவிட்டேன். அவரிடம் பணம் இல்லாவிட்டாலும் பரவாயில்லை. ஆனால் பணம் இருக்கும்போது எனக்கு கொடுத்து உதவி செய்திருக்கலாம். ஆனால் அவர் அதை கடைசிவரை செய்யவே இல்லை. கடைசி நேரத்தில் மறுத்துவிட்டார். மணிரத்னம் எல்லாம் என்ன மனுஷன்.

முதலில் மனுஷனாகத்தான் இருக்க வேண்டும். எல்லோருக்கும்தான் பணம் வேண்டும். அதற்காக இப்படியா செய்வது. பொன்னியின் செல்வன் படத்தின் முதல் பாகத்தை நான் ரிலீஸ் செய்வதாக இருந்தது. ஆனால் கடைசி நேரத்தில் படத்தை தரமாட்டேன் என்று அவர் சொல்லிவிட்டார்” என்றார். மாணிக்கம் நாராயணன் விஜய்யை வைத்து மாண்புமிகு மாணவன், கமல் ஹாசனை வைத்து வேட்டையாடு விளையாடு உள்ளிட்ட படங்களை தயாரித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

சற்று முன்