- Advertisement -
Homeபொழுதுபோக்குசீமான், அண்ணாமலை அடுத்து விஜய் அரசியலுக்கு வந்தால்…?- நடிகர் ராதாரவி சொன்ன அந்த முக்கியமான...

சீமான், அண்ணாமலை அடுத்து விஜய் அரசியலுக்கு வந்தால்…?- நடிகர் ராதாரவி சொன்ன அந்த முக்கியமான விஷயம்

- Advertisement -

நடிகர் ராதாரவி, தமிழ் சினிமாவில் மிக முக்கியமான நடிகர். எம்ஆர் ராதாவின் மகன். தமிழ் சினிமாவில் ராதாரவிக்கு என்றொரு தனியிடம் உண்டு. துவக்கத்தில் சில படங்களில் ஹீரோவாக நடித்தார். பின்னர் குணச்சித்திரம், வில்லன் என மாறினார். இப்போதும் முக்கிய கேரக்டர்களில் தமிழ் சினிமாவில் நடித்துக்கொண்டு இருக்கிறார்.

சமீபத்திய நேர்காணல் ஒன்றில் நடிகர் ராதாரவியிடம், நடிகர் விஜய் அரசியலுக்கு வருவது குறித்து கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு அவர் பதிலளித்து கூறுகையில், நடிகர் அரசியலுக்கு வரும்போது வரட்டும். வந்த பின்புதான் அவரது செயல்பாடுகள் பற்றி தெரிய வரும்.

- Advertisement -

விஜயை சின்ன பையனாக இருக்கும்போது இருந்து எனக்கு தெரியும். அப்போது எப்படி இருந்தாரோ, அப்படியே தான் இப்பவும் இருக்கிறார். இன்னும் அவரது நடவடிக்கை எதுவும் மாறவில்லை. தலைகுனிந்தபடி தான் அன்றும் நடந்தார். இன்றும் நடக்கிறார். அவரிடம் எந்த மாற்றமும் இல்லை.

ஆயிரக்கணக்கான மக்கள், அவரை பார்த்து கைதட்டுகின்றனர். விசிலடிக்கின்றனர். உற்சாகமாக கூச்சலிடுகின்றனர். மற்றவர்களாக இருந்தால் இதை மண்டையில் ஏற்றிக்கொண்டு, அதற்கேற்ப நடந்துக்கொள்வர். விஜயிடம் எந்த மாற்றமும் இல்லை. அவர் அதில் நடிக்கிறார் என்றாலும் கூட அதை நான் பாராட்டுவேன்.

- Advertisement -

விஜய் அரசியலுக்கு வந்தால் சீமான், உதயநிதி, விஜய் ஆகிய மூவருக்கும் கடும் போட்டி இருக்கும் என்பதெல்லாம் ஏற்றுக்கொள்ள முடியாது. ஏனென்றால் சீமான், உதயநிதி எல்லாம் அரசியலில் ஊறியவர்கள். அவர்கள் ரத்தத்திலேயே அரசியல் ஊறியிருக்கிறது.

ஆனால் அரசியலுக்கு விஜய் வந்தால் கண்டிப்பாக ஜெயிடுச்சுடுவார். நிச்சயம் தாக்குபிடிப்பார். அது எந்த மாற்றுக்கருத்தும் இல்லை. சீமான் பக்கம் இளைஞர்கள் இருக்கின்றனர். அண்ணாமலை பக்கம் இளைஞர்கள் இருக்கின்றனர். அதை விட அதிகமான இளைஞர்கள் விஜய் பக்கம் இருக்கின்றனர் என்று கூறியிருக்கிறார் நடிகர் ராதாரவி.

- Advertisement -

சற்று முன்