- Advertisement -
Homeபொழுதுபோக்குபொன்விழா கொண்டாட்டங்களுக்கு சம்மதிக்க மறுத்த நடிகர் சூப்பர் ஸ்டார், பின்னால் இப்படி ஒரு காரணமா? -...

பொன்விழா கொண்டாட்டங்களுக்கு சம்மதிக்க மறுத்த நடிகர் சூப்பர் ஸ்டார், பின்னால் இப்படி ஒரு காரணமா? – என்ன தலைவா என புலம்பும் ரசிகர்கள்!

- Advertisement -

நடிகர் ரஜினிகாந்த் கடந்த 1975ம் ஆண்டில் இயக்குனர் கே பாலசந்தர் இயக்கத்தில் வெளியான அபூர்வ ராகங்கள் என்ற படத்தின் மூலம் நடிகராக தமிழ் சினிமாவில் அறிமுகமானார். பிறகு சின்ன சின்ன கேரக்டர்களில் நடித்த அவர் பிறகு ரசிகர்கள் கொண்டாடும் ஒரு முன்னணி நடிகராக மாறினார். பிறகு தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டாராக உச்சத்தில் இருந்து வருகிறார்.

தமிழ் சினிமாவில் ரஜினிகாந்த் இப்போது தனது 50வது ஆண்டில் பொன்விழாவில் இருந்து வருகிறார். அதாவது தமிழ் சினிமாவில் 50 ஆண்டுகளை ரஜினிகாந்த் நிறைவு செய்திருக்கிறார். இந்த அபார வெற்றியை சாதனையை தமிழ் சினிமா கையில் எடுத்து கொண்டாட வேண்டும். ரஜினிக்கு பொன்விழா பாராட்டு நிகழ்ச்சியை பிரமாண்டமாக நடத்த வேண்டும் என்பது ரஜினி ரசிகர்களின் ஆவலாக உள்ளது.

தமிழ் சினிமாவில் முன்னணி தயாரிப்பாளரான எஸ் தாணு இந்த விஷயத்தில் ஆர்வம் கொண்டு, ரஜினி மகள்களிடம் இதுகுறித்து பேசியிருக்கிறார். ஆனால் அவர்கள் தரப்பில் இருந்தோ, ரஜினி தரப்பில் இருந்தோ உற்சாகமான பதில் எதுவும் வராத நிலையில் எஸ் தாணு அந்த விஷயத்தை கைவிட்டு விட்டு தனது தயாரிப்பு பணிகளில் கவனம் செலுத்தி வருகிறார்.

இந்த சூழலில் நடப்பு தயாரிப்பாளர் சங்கம் சார்பில், 7 நாட்களுக்கு தியேட்டர்களில் ரஜினியின் முக்கிய வெற்றிப் படங்களை இந்த ஆண்டில் திரையிடுவது என்றும் அந்த படங்களின் இயக்குனர்களை ரசிகர்கள் மத்தியில் பேச வைப்பது என்றும், விழாவின் நிறைவாக சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கில் ரஜினிகாந்த் மற்றும் சினிமா பிரபலங்கள் அனைவரும் பங்கேற்கும் ரஜினி பொன்விழாவை கொண்டாடுவது என்றும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த விழாவை வணிக நோக்கம் இல்லாமல் தமிழ் சினிமாவில் ஒரு சாதனை நாயகனாக வலம் வரும் ரஜினிக்கு செய்யும் மிகப்பெரிய மரியாதையாக கௌரவமாக செய்ய திட்டமிட்டு, இதுகுறித்து ரஜினியின் உதவியாளர் ரியாஸ் மூலமாக இந்த தகவல் சமீபத்தில் ரஜினிக்கு நேரடியான கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.

ஆனால் இதை ஏற்க மறுத்த நடிகர் ரஜினிகாந்த், என் வாழ்நாள் முழுவதும் நான் நடித்துக் கொண்டே இருப்பதுதான் என்னுடைய மகிழ்ச்சி. இந்த வாழ்த்துரை புகழுரை பாராட்டு எல்லாம் எதற்கு வேண்டாம் என்று ஒரே வார்த்தையில் நோ சொல்லி விட்டார். சமீபத்தில்தான் ஐஸ்வர்யா தனுஷ் விவாகரத்து நடந்து பிரிந்துள்ளனர். தமிழ்நாட்டில் மும்மொழி கொள்கை பிரச்னை பெரிய விவகாரமாக மாறி வருகிறது. ரஜினி விழாவில் ஏதேனும் விமர்சனங்கள் சர்ச்சைகள் ஏற்பட்டால் எதற்கு தேவையில்லாத தலைவலி என்றுதான் இந்த காரணங்களுக்காகவே ரஜினி பொன்விழாவை மறுத்து விட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

சற்று முன்