- Advertisement -
Homeபொழுதுபோக்குநான் இப்படி பேசுவதால் கமல்ஹாசன் தப்பா நெனைச்சுக்காதீங்க, அதுவும் தேர்தல் நேரத்தில்…. - விழாவில் பங்கேற்ற...

நான் இப்படி பேசுவதால் கமல்ஹாசன் தப்பா நெனைச்சுக்காதீங்க, அதுவும் தேர்தல் நேரத்தில்…. – விழாவில் பங்கேற்ற சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அதிரடி பேச்சு

- Advertisement -

நடிகர் ரஜினிகாந்த் இப்போது வேட்டையன் படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு ஏறக்குறைய முடிந்துவிட்டது. இன்னும் சில தினங்கள் மட்டுமே பேட்ச் ஒர்க் இருப்பதாக கூறப்படுகிறது. அதிலும் ரஜினிகாந்த் நடிக்க வேண்டிய காட்சிகள் எடுத்து முடித்துவிட்டதாக கூறப்படுகிறது. இனி அடுத்ததாக லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினி தனது 171வது படத்தில் நடிக்க இருக்கிறார்.

நாடாளுமன்ற தேர்தல் ஓட்டுப்பதிவு நாள் அறிவிக்கப்பட்டு விட்டது. நாட்டில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துவிட்டன. இந்நிலையில் ரஜினிகாந்த் தனது அரசியல் ஆதரவு குறித்து வெளிப்படையாக ஏதேனும் தெரிவிப்பாரா என்ற எதிர்பார்ப்பு ஊடகங்கள் மத்தியில் அதிகமாக காணப்படுகிறது. ஆனால் ரஜினியை பொருத்த வரை எந்த பதிலும் இல்லாமல் நடுநிலையாக இருந்து வருகிறார்.

- Advertisement -

இந்நிலையில் சென்னையில் உள்ள காவேரி மருத்துவமனையின் புதிய கிளை துவக்க விழா நடந்தது. இதில் சிறப்பு விருந்தினராக நடிகர் ரஜினிகாந்த் கலந்துக்கொண்டார். அதில் ரஜினிகாந்த் பேசுகையில், நான் எந்த ஒரு கட்டிட திறப்பு விழாவுக்கு சென்றாலும் உடனே நானும் அதில் ஒரு பார்ட்னர் என்று கூறி விடுகின்றனர்.

இந்த உடம்பு, சென்னையில் உள்ள பல மருத்துவமனைகளில் இருந்து சிங்கப்பூர், அமெரிக்கா வரை பல வெளிநாடுகளுக்கு போய்விட்டு வந்துள்ளது. எனக்கு ஒரு மேஜர் ஆபரேசன் சென்னையில் உள்ள ஒரு மருத்துவமனையில் தான் வெற்றிக்கரமாக நடந்து முடிந்தது. இந்த வாழ்க்கையில் ஒழுக்கம், நாணயம், விடாமுயற்சி, ஈடுபாடு இந்த நான்கு விஷயம் யாரிடம் இல்லையோ, அவர்கள் வாழ்க்கையில் முன்னேற முடியாது.

- Advertisement -

கமல் வீடு அருகே காவேரி மருத்துவமனை இருக்கிறது என்று சொன்ன காலம் போய்விட்டது. இப்போது காவேரி மருத்துவமனை அருகே கமல் வீடு இருக்கிறது என்று சொல்லும் அளவுக்கு வந்துவிட்டது. நான் இப்படி பேசுவதால் கமல்ஹாசன் தப்பாக நினைக்காதீங்க. மீடியாக்காரர்களே இதை ஒரு உதாரணத்திற்காக சொன்னேன்.

நான் இங்கு வந்த உடனே மீடியாக்காரர்களை பார்த்ததும் எனக்கு பயம் வந்துவிட்டது. அதுவும் தேர்தல் நேரத்தில் மூச்சு விட்டால் கூட பயமாக உள்ளது. எல்லாவற்றிலும் கலப்படம் வந்துவிட்டது. மருந்திலும் கூட கலப்படம் வந்துவிட்டது, என்று ரஜினிகாந்த் பேசியிருக்கிறார். ஏற்கனவே ரஜினியை சங்கி என பலரும் கலாய்த்து வருவதால், தேர்தல் நேரத்தில் எந்த கருத்தும் சொல்ல விரும்பாததால், தேர்தல் நேரத்தில் மூச்சுவிடவே பயமாக இருப்பதாக சிம்பாலிக்காக ரஜினிகாந்த் இந்த விழாவில் பேசியிருக்கிறார்.

- Advertisement -

சற்று முன்