- Advertisement -
Homeபொழுதுபோக்குவிடாமுயற்சி படப்பிடிப்பு திடீர் பிரேக் அப்க்கு காரணம் சூறாவளி, மணல் புயல் எல்லாம் காரணம் இல்லே...

விடாமுயற்சி படப்பிடிப்பு திடீர் பிரேக் அப்க்கு காரணம் சூறாவளி, மணல் புயல் எல்லாம் காரணம் இல்லே – இது மேட்டரே வேறப்பா…

- Advertisement -

அஜர்பைஜானில் கடந்த 3 மாதங்களாக விடாமுயற்சி ஷூட்டிங் நடந்து வருகிறது. ஏறக்குறைய ஓராண்டு முன்பே துவங்கப்பட வேண்டிய இந்த ஷூட்டிங் ஆரம்பித்ததே பெரிய தாமதத்துக்கு பிறகுதான். என்றாலும் படப்பிடிப்பு துவங்கியது முதலே விறுவிறுப்பாக தான் நடந்து வந்தது.

இடையில் கலை இயக்குநர் மிலன் திடீர் மறைவு, படப்பிடிப்புக் குழுவை நிலை தடுமாற வைத்தது. எனினும் சில தினங்களில் சுதாரித்துக்கொண்டு பழைய வேகத்துக்கு படப்பிடிப்பை கொண்டு வந்தனர். அடுத்த பஞ்சாயத்து டைரக்டர் மகிழ் திருமேனி, ஒளிப்பதிவாளர் நீரவ்ஷா இடையே எழுந்தது.

- Advertisement -

அஜீத்குமாரின் படங்களின் ஆஸ்தான ஒளிப்பதிவாளரான நீரவ்ஷா மீது அதீத நம்பிக்கை வைத்த அஜீத், ஏதாவது கேட்கவேண்டுமென்றால் நீரவ்ஷாவிடம் ஒருவார்த்தை கேட்டு விடுங்கள் என்று கூறியதால் மகிழ்திருமேனி கடுப்பாகி உள்ளார். இயக்குநர் சொல்வதை தான் ஒளிப்பதிவாளர் கேட்க வேண்டும். ஒளிப்பதிவாளர் ஆலோசனைப்படி இயக்குநர் செயல்பட முடியாது என்பதால் அவரை மாற்றிவிட்டு ஒளிப்பதிவாளர் ஓம் பிரகாஷை நியமித்தார்.

இந்த சூழலில் அஜர்பைஜானில் அந்த நாட்டு சட்டப்படி திங்கள் முதல் வெள்ளி வரை 5 நாட்கள் மட்டுமே பணி, வாரம் தோறும் சனி ஞாயிறு இரண்டு நாட்களுமே விடுமுறை என்பதுதான் வழக்கம். ஆனால் படப்பிடிப்புக்குழுவில் அந்த நாட்டு ஊழியர்களும் பலர் பணிசெய்வதால் வாரத்தில் அனைத்து நாட்களும் பணிசெய்ததால் விடுமுறை பஞ்சாயத்து எழுந்தது. 7 நாட்களுக்கு ஒருநாள் விடுமுறை என்ற நிலைக்கு படப்பிடிப்புக்குழு வந்தது.

- Advertisement -

இந்த பஞ்சாயத்துக்கு நடுவே சூறாவளி, மணல் புயல், கடும்குளிர், மழை போன்ற பாதிப்புகளும் படப்பிடிப்புக்கு அடிக்கடி இடையூறு செய்தது. அதனால் நவம்பர் மாதத்தில் படக்குழு புறப்பட்டு சென்னை வந்துவிட்டு பிறகு, டிசம்பர் மாதத்தில் சென்று படப்பிடிப்பை நடத்தி வந்தனர்.

இந்நிலையில் மீண்டும் பனிப்புயல், சூறாவளி ஏற்பட்டதால் அஜர்பைஜானில் இருந்து விடாமுயற்சி படப்பிடிப்புக் குழு சென்னை திரும்பியதாக கூறப்பட்டது. துபாயில் தனது வீடு இருப்பதால், அங்கு அஜீத்குமார் புத்தாண்டு கொண்டாட சென்றுவிட்டதாக கூறப்பட்டது. ஆனால் உண்மையில் விடாமுயற்சி படத்தை தயாரிக்கும் லைகா நிறுவனத்துக்கு பைனான்ஸ் வருவதில் ஏதோ தாமதம் ஏற்பட்டுள்ளது. அதன் காரணமாகவே படப்பிடிப்புக்கு இந்த பிரேக் அப் விடப்பட்டுள்ளதாக இப்போது தகவல் வெளியாகி உள்ளது.

- Advertisement -

சற்று முன்