நடிகர் சிவகார்த்திகேயன் தற்போது ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் நடித்து வருகிறார். ஏ ஆர் முருகதாஸிடம் உதவி இயக்குனராக இருந்த ராஜ்குமார் பெரியசாமி, ரங்கூன் திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமாகி இருந்தார். கௌதம் கார்த்திக் கதாநாயகனாக நடித்த இந்த திரைப்படம், விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பை பெற்றது.
இதனைத் தொடர்ந்து நீண்ட இடைவேளைக்கு பிறகு, தனக்கான கதையை எழுதி இருக்கிறார் ராஜ்குமார் பெரியசாமி. இந்தத் திரைப்படத்தை, கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இதில் கதாநாயகியாக சாய்பல்லவி நடிக்கிறார். ராணுவ பின்புலத்தை மையமாக வைத்து இந்த திரைப்படம் எடுக்கப்பட்டு வருகிறது. இதற்காக முதல் கட்ட படப்பிடிப்பு காஷ்மீரில் நடைபெற்றது.
பின்னர் சென்னையில் இதன் படபிடிப்பு நடத்தப்பட்டு வருகிறது. ஆனால் குறித்த நேரத்தில், சூட்டிங் பணிகள் நிறைவடையவில்லை என்று கூறப்படுகிறது. அதாவது, இன்னும் இரண்டு மூன்று மாதங்கள் படத்தின் படப்பிடிப்பு தள்ளிப் போகும் என்று கூறப்படுகிறது. இதில் ஆக்சன் ஹீரோவாக தன்னை நிலை நிறுத்தி இருக்கிறார் சிவகார்த்திகேயன்.
இந்த திரைப்படத்திற்குப் பிறகு அவர் இயக்குனர் ஏ ஆர் முருகதாஸ் உடன் இணைகிறார். தர்பார் திரைப்படத்தின் தோல்விக்கு பிறகு முருகதாஸ் எந்த ஒரு திரைப்படத்தையும் இயக்கவில்லை. இந்த நிலையில் அவர் அடுத்ததாக விஜயை வைத்து படம் எடுக்கப்படுவதாக தகவல் வெளியானது. அவர் ஏற்கனவே விஜயை வைத்து துப்பாக்கி கத்தி மற்றும் சர்க்கார் திரைப்படத்தை எடுத்திருந்தார். இதில் சர்க்கார் திரைப்படம் மட்டும் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை.
இப்படியான சூழலில், விஜய் ஏ ஆர் முருகதாஸின் படம் திடீரென நின்று போனது. இந்த நிலையில் அந்தக் கதையை தான் சிவகார்த்திகேயன் எனக்கு ஏ ஆர் முருகதாஸ் எழுதியிருப்பதாக கூறப்படுகிறது. சிவகார்த்திகேயனின் 23 வது திரைப்படமாக உருவாகும் இதனை தெலுங்கு சினிமாவின் ஸ்ரீ லட்சுமி மூவிஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இதன் சூட்டிங் பணிகள் வரும் ஜூன் அல்லது ஜூலை மாதம் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இப்படியான சூழலில் தனது 25வது படத்தை இயக்கும் வாய்ப்பை வெங்கட் பிரபுவிற்கு சிவகார்த்திகேயன் அளித்திருக்கிறார். தல அஜித்தை ஐம்பதாவது திரைப்படமாக மங்காத்தா என்னும் மிக பெரிய பிளாக்பஸ்டர் கிட்ட அவர் கொடுத்திருந்தார். தற்போது விஜய்யை வைத்து கோட் படத்தையும் வெங்கட் பிரபு இயக்கி வருகிறார். இப்படியான சூழலில் தான் வெங்கட் பிரபுவுடன் சிவகார்த்திகேயன் இணைகிறார். இது திரைப்படத்தை சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்க இருப்பதாகவும் தகவல் வெளியாகி இருக்கிறது.





