சிவகார்த்திகேயன் தற்போது ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில் நடித்து வருகிறார். சிவகார்த்திகேயனின் 23 வது திரைப்படமாக இது உருவாக்கப்பட்டு வருகிறது. சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இதன் சூட்டிங் நடத்தப்பட்டு வருகிறது. இதில் நடிகருடன் ருக்மணி வசந்த், விக்ராந்த், வித்யூத் உள்ளிட்டோர் நடிப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அனிருத் இதற்கு இசையமைக்கிறார். தெலுங்கின் முன்னணி நிறுவனமான ஸ்ரீ லட்சுமி மூவி மேக்கர்ஸ் இந்தப் படத்தை தயாரித்துள்ளது. இதில் சிவகார்த்திகேயன் மனநலம் குன்றியவராக நடிப்பதாக கூறப்படுகிறது. தற்போது இதன் 60 சதவீத பணிகள் முடிவடைந்துள்ளன. இதற்கு சிங்க நடை என டைட்டில் வைக்கப்பட்டிருப்பதாகவும் தெரிகிறது.
அனேகமாக இந்த திரைப்படம் இந்த ஆண்டு இறுதிக்குள் வெளியாகும் என்று பேசப்படுகிறது. இதனிடையே, சிவகார்த்திகேயனின் அமரன் திரைப்படம் வரும் அக்டோபர் 15 ஆம் தேதி வெளியாக இருப்பதாக கூறப்படுகிறது. கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் இந்த திரைப்படத்தை தயாரித்து இருப்பது நம் அனைவருக்கும் தெரியும். இதனை ராஜ்குமார் பெரியசாமி இயக்கியுள்ளார்.
ராணுவ பின்னணியை மையமாக வைத்து இந்த திரைப்படம் எடுக்கப்பட்டுள்ளது. மேஜர் முகுந்தனின் வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்து தான் இந்த திரைப்படத்தை ராஜ்குமார் பெரியசாமி இயக்கி இருக்கிறார். இதன் ட்ரெயினரும் அண்மையில் வெளியாகி வரவேற்பை பெற்றதால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு ஓரளவு அதிகரிக்க செய்துள்ளது.
இப்படி இரண்டு திரைப்படங்களில் பிஸியாக இருக்கும் சிவகார்த்திகேயன், தனது 25வது திரைப்படத்திற்காக வெங்கட் பிரபுவுடன் இணைகிறார். அப்படி என்றால் அவரது 24 வது திரைப்படம் எது என்று பலரும் கேள்வி எழுப்பி வந்தனர். தற்போது இதற்கு பதில் கிடைத்திருக்கிறது. அதாவது சிவகார்த்திகேயனின் 24 வது திரைப்படத்தை டான் பட இயக்குனர் சிபி சக்கரவர்த்தி இயக்க இருப்பது உறுதியாகி உள்ளது.
டாக்டர் திரைப்படத்தை தொடர்ந்து டான் திரைப்படம் சிவகார்த்திகேயனுக்கு 100 கோடி ரூபாய் வசூல் கொடுத்தது. அந்தப் படத்தின் கிளைமாக்ஸ் காட்சியில் தந்தை சென்டிமென்ட் தூக்கலாக இருந்தால் பெரிய அளவில் பேசப்பட்டது. ஆனால் அது க்ரின்ச் ஆக இருப்பதாக இப்போதுவரை ரசிகர்கள் கூறி வருகின்றனர். இதனிடையே மீண்டும் சிவகார்த்திகேயன் சிபி சக்கரவர்த்தி இணையும் திரைப்படத்திற்கு எஸ் ஜே சூர்யாவும் ஒப்பந்தம் ஆகி இருக்கிறார். படத்தில் கதாநாயகியாக ரஷ்மிகா மந்தனா நடிக்கிறார். விரைவில் இதற்கான சூட்டிங் தொடங்க உள்ளது.





