- Advertisement -
Homeபொழுதுபோக்குவிக்னேஷ் சிவன், நயன்தாரா இப்போது கணவன், மனைவியாக வாழ்வதற்கு காரணமே நான்தான் - விளாசித்...

விக்னேஷ் சிவன், நயன்தாரா இப்போது கணவன், மனைவியாக வாழ்வதற்கு காரணமே நான்தான் – விளாசித் தள்ளிய நடிகர் மிர்ச்சி சிவா, கிடுகிடுத்துப் போன கோலிவுட் வட்டாரம்!

- Advertisement -

காமெடி கலந்த ஜாலியான ஹீரோ என்றால் முதலில் ரசிகர்களின் நினைவுக்கு வருபவர் மிர்ச்சி சிவா தான். தமிழ் சினிமாவில் உள்ள அபத்தங்களை எல்லாம் ஒட்டுமொத்தமாக பகிரங்கப்படுத்திய தமிழ்ப்படம் என்ற படத்தில் மிர்ச்சி சிவாவை தவிர வேறு யாராலும் அவ்வளவு துணிச்சலாக நடித்திருக்க முடியாது என பலரும் பாராட்டிய பெருமைக்குரியவர் அவர் என்பது குறிப்பிடத்தக்கது.

வெங்கட்பிரபு இயக்கத்தில் சென்னை 28 படத்தில் முதல், 2ம் பாகம், தமிழ்ப்படம், கலகலப்பு, கலகலப்பு 2, வணக்கம் சென்னை, தில்லுமுல்லு, வ குவாட்டர் கட்டிங் உள்ளிட்ட பல படங்களில் நடித்தவர். துவக்கத்தில் ரேடியோவில் அறிவிப்பாளராக இருந்து பிறகு சினிமாவுக்குள் வந்தவர். தனக்கான கேரக்டர்களை தேர்வு செய்து நடித்து வருகிறார்.

- Advertisement -

தமிழ் சினிமாவில் பல வெற்றிப் படங்களில் நடித்த மிர்ச்சி சிவா நடிப்பில் அடுத்ததாக சூது கவ்வும் 2 படம் வெளியாக உள்ளது. இந்த படத்தின் பிரமோ நிகழ்ச்சிக்காக மிர்ச்சி சிவா பங்கேற்று பேசி வருகிறார். சமீபத்தில் ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்ற அவர், நடிகை நயன்தாரா, விக்னேஷ் சிவன் திருமணம் செய்துக்கொண்டு கணவன், மனைவியாக வாழவே நான்தான் காரணம் என்று அதிரடியாக பேசியிருக்கிறார்.

இதுகுறித்து நடிகர் மிர்ச்சி சிவா கூறியதாவது, நானும் ரவுடிதான் படத்தில் முதலில் நடிக்க இருந்தது நான்தான். என்னை தான் அந்தப் படத்தில் நாயகனாக நடிக்க வைக்க விக்னேஷ் சிவன் என்னிடம் கதை சொன்னார். ஆனால் இந்த கதை எனக்கு செட்டாகாது என்று கூறி நான் மறுத்து விட்டேன்.

- Advertisement -

ஒருவேளை நான் அந்தப் படத்தில் நடித்திருந்தால், எனக்கு ஜோடியாக கண்டிப்பாக நயன்தாரா நடித்திருக்க மாட்டார். அவருக்கு பதிலாக வேறொரு கதாநாயகி தான் நடித்திருப்பார். அந்த படத்தை விக்னேஷ் சிவன் இயக்கியிருந்தாலும் கதாநாயகி வேறொருவராக இருந்திருந்தால் விக்னேஷ் சிவனுக்கும் காதல் வந்திருக்காது.

நான் அந்த படத்தில் நடிக்க மறுத்ததால், அந்த கேரக்டரில் விஜய் சேதுபதி நடித்தார். அவருக்கு ஜோடியாக நயன்தாரா நடித்தார். அதனால்தான் விக்னேஷ் சிவனுக்கும் நயன்தாராவுக்கும் இடையில் காதல் வந்தது. இருவரும் திருமணம் செய்துக்கொண்டனர். அதனால் நானும் ரவுடிதான் படத்தில் நான் நடிக்க மறுத்ததால்தான், இன்று அவர்கள் கணவன், மனைவியாக வாழ்ந்து வருகின்றனர் என்று தனக்கே உரிய பாணியில் காமெடியாக பேசியிருக்கிறார் நடிகர் மிர்ச்சி சிவா. இது தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

- Advertisement -

சற்று முன்