- Advertisement -
Homeபொழுதுபோக்குகமல்ஹாசனை மிரட்டுவதை அனுமதிக்க முடியாது, அவரை மன்னிப்பு கேட்க சொல்வது ஐகோர்ட்டின் வேலை அல்ல -...

கமல்ஹாசனை மிரட்டுவதை அனுமதிக்க முடியாது, அவரை மன்னிப்பு கேட்க சொல்வது ஐகோர்ட்டின் வேலை அல்ல – விளாசித் தள்ளிய சுப்ரீம் கோர்ட்!

- Advertisement -

நடிகர் கமல்ஹாசன் நடித்த தக்லைஃப் படம் இம்மாதம் 5ம் தேதி வெளியானது. இந்த படத்தை கர்நாடகாவில் வெளியிட ஐகோர்ட் தடை விதித்தது. தமிழில் இருந்துதான் கன்னட மொழி பிறந்தது என கமல்ஹாசன் பேசியது சர்ச்சையான நிலையில், கன்னட திரைப்பட வர்த்தக சபை கர்நாடகாவில் தக்லைஃப் படத்தை வெளியிட தடை விதித்தது.

மேலும் கமல்ஹாசன் மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் கன்னட சினிமா வர்த்தக சபை மற்றும் கன்னட அமைப்புகளும் வலியுறுத்தின. ஆனால் மன்னிப்பு கேட்க கமல் மறுத்துவிட்டார். மேலும் இந்த விவகாரம் தொடர்பாக நடிகர் கமல்ஹாசன், தனது ராஜ்கமல் பிலிம்ஸ் தயாரிப்பு நிறுவனம் சார்பில் கர்நாடகா கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்.

- Advertisement -

தனது தக்லைலைஃப் படத்தை கர்நாடகாவில் வெளியிடவும் தியேட்டர்களுக்கு பாதுகாப்பு தரவும் கேட்டுக்கொண்டார். ஆனால் கமல் மன்னிப்பு கேட்காமல் தக்லைஃப் படத்தை வெளியிட அனுமதிக்க முடியாது என கர்நாடகா கோர்ட்டும் எச்சரித்தது. எந்த அடிப்படையில் கமல், தமிழில் இருந்து கன்னட மொழி பிறந்தது என்று கூறினார் என்றும் கர்நாடகா நீதிபதி கேள்வி எழுப்பியிருந்தார்.

இந்நிலையில் மகேஷ் ரெட்டி என்ற சமூக ஆர்வலர், கன்னட சினிமா வர்த்தக சபை கர்நாடகாவில் தக்லைஃப் படத்தை வெளியிட தடை விதித்தது நீதித்துறை அதிகாரத்தை மீறியதாகும். அதனால் அந்த தடையை நீக்கி தக்லைஃப் படத்தை கர்நாடகாவில் திரையிட அனுமதி வழங்கி தியேட்டர்களுக்கும் பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

- Advertisement -

இதை ஏற்றுக்கொண்ட சுப்ரீம் கோர்ட், இதுகுறித்து விளக்கம் கேட்டு கர்நாடகா அரசுக்கும் கன்னட சினிமா வர்த்தக சபைக்கும் நோட்டீஸ் அனுப்பியது. இதையடுத்து இன்று மீண்டும் இந்த வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் விசாரணைக்கு வந்தது. அப்போது பேசிய சுப்ரீம் கோர்ட் நீதிபதி, உரிய தணிக்கை சான்று பெற்ற தக்லைஃப் படத்தை மொழி விவகாரத்தை காரணம் காட்டி கர்நாடகாவில் தடை விதிக்க முடியாது.

தக்லைஃப் படம் வெளியாகும் தியேட்டர்களுக்கு உரிய பாதுகாப்பை வழங்க கர்நாடகா அரசு உறுதியளிக்க வேண்டும். இதுகுறித்து வரும் வியாழக்கிழமைக்குள் கர்நாடகா அரசு விளக்கம் அளிக்க வேண்டும். கமல் பேச்சுக்காக அவரை மிரட்டுவதை அனுமதிக்க முடியாது. அவர் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று கூறுவது ஐகோர்ட்டின் வேலை கிடையாது என்றும் சுப்ரீம் கோர்ட் நீதிபதி கண்டித்திருப்பது குறிப்பிடதகக்கது.

- Advertisement -

சற்று முன்