- Advertisement -
Homeபொழுதுபோக்குஅட்லியை தொடர்ந்து சிறப்பான செய்கையில் ஈடுபடப் போகும் வெங்கட் பிரபு... அட்ராசக்க இது நம்ம லிஸ்டையே...

அட்லியை தொடர்ந்து சிறப்பான செய்கையில் ஈடுபடப் போகும் வெங்கட் பிரபு… அட்ராசக்க இது நம்ம லிஸ்டையே இல்லையே…

- Advertisement -

இயக்குனரும் பாடல் ஆசிரியரும் இசையமைப்பாளருமான கங்கை அமரனின் மூத்த மகன் தான் வெங்கட் பிரபு. ஆரம்பத்தில் திரைப்படங்களில் சின்ன சின்ன கதாபாத்திரங்களில் அவர் நடித்து வந்தார். இதில் பெரிதாக வெங்கட் பிரபுவுக்கு எந்த ஒரு வளர்ச்சியும் இல்லாமல் இருந்தது. இப்படியான சூழலில் தான் தனது தந்தையைப் போலவே, இயக்கத்தில் ஆர்வம் காட்ட ஆரம்பித்தார் வெங்கட் பிரபு.

 

- Advertisement -

இப்படியாக களத்தில் இறங்கிய அவருக்கு முதலாவது திரைப்படமாக அமைந்தது சென்னை 600028. தமிழ் சினிமா இன்று வரை கொண்டாடும் திரைப்படங்களில் ஒன்றுதான் அது. சென்னை மாநகரில் வளரும் இளைஞர்களின் கதையை தன்னால் எந்த அளவுக்கு சுவாரசியமாக கொடுக்க முடியுமோ அதை திருப்திகரமாக செய்திருந்தார் வெங்கட் பிரபு.

 

- Advertisement -

கிரிக்கெட் படம் என்றால் முழுக்க முழுக்க விளையாட்டை மட்டும் வைக்காமல், அதில் காதல் நட்பு சோகம் பிரிவு துன்பம் என அனைத்தையும் கலந்து கட்டி ஒரு சூப்பர் பேக்கேஜாக வெங்கட் பிரபு கொடுத்திருந்தார். இங்கிருந்து தான் அவரது வெற்றிப் பயணம் ஆரம்பமானது.

 

தொடர்ந்து சரோஜா மற்றும் கோவா என இரண்டு வெற்றி திரைப்படங்களை இயக்கிய அவருக்கு அஜித்துடன் இணையும் வாய்ப்பு கிடைத்தது. அதுவும் 50 வது திரைப்படத்தை அவர் இயக்கினார். மங்காத்தா திரைப்படம் 2011 ஆம் ஆண்டு வெளியாகி பட்டித்தொட்டி எங்கும் ஹிட் அடித்தது. அதுமட்டுமல்லாமல் வெங்கட் பிரபுவை அடுத்த தளத்திற்கும் அழைத்துச் சென்றது.

 

இங்கிருந்து கார்த்தியை வைத்து பிரியாணி சூர்யாவை வைத்து மாஸ் உள்ளிட்ட திரைப்படங்களை வெங்கட் பிரபு இயக்கினார். தொடர்ந்து சென்னை 600028 திரைப்படத்தின் இரண்டாம் பாகமும் வெளியானது. இது ரசிகர்களிடையே மகத்தான வரவேற்பை பெற்றது. பிறகு அவரது இயக்கத்தில் மாநாடு திரைப்படம் வெளியாகி சக்கை போடு போட்டது.

 

கடைசியாக அவர் தளபதி விஜயை வைத்து தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் திரைப்படத்தை இயக்கியிருந்தார். மிகப்பெரும் எதிர்பார்ப்பில் வெளியான இந்த திரைப்படம் விமர்சன ரீதியாக பலரை கவரவில்லை என்றாலும், வசூல் ரீதியாக பெரிய அளவு பாதிப்பை கொடுக்கவில்லை. அடுத்ததாக அவர் சிவகார்த்திகேயனை வைத்து ஒரு படத்தை இயக்க இருக்கிறார். பிறகு அஜித் குமாருடனும் பணிபுரிய இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த நிலையில் வெங்கட் பிரபு, ஹிந்தி திரை உலகில் ஒரு திரைப்படத்தை இயக்குவதற்கான பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. அதில் அக்ஷய் குமார் நடிப்பதற்கு பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஏற்கனவே அட்லீ ஷாருக்கானை வைத்து, ஜவான் திரைப்படத்தை எடுத்து மிகப்பெரிய வெற்றியை கண்டார். தற்போது இந்த வரிசையில், வெங்கட் பிரபுவும் இணைகிறாரா என்று சினிமா விமர்சகர்கள் ஆர்வமுடன் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

- Advertisement -

சற்று முன்