தமிழ் சினிமாவில் இசையமைப்பாளராக அறிமுகமானவர் விஜய் ஆண்டனி. ஆரம்பத்தில் அவர் இசையமைத்து வந்த பாடல்கள் அனைத்தும் சூப்பர் டூப்பர் ஹிட் அடித்தன. குறிப்பாக காதலில் விழுந்தேன் திரைப்படம் அவருக்கு மிகப்பெரிய ஒரு திருப்புமுனையை கொடுத்தது.
அந்த திரைப்படத்தில் இடம் பெற்ற நாக்க முக்கா பாடல் பட்டித் தொட்டி எங்கும் ஹிட் அடிக்க பலராலும் பேசப்பட்டார் விஜய் ஆண்டனி. தொடர்ந்து பல்வேறு திரைப்படங்களுக்கு அவர் இசையமைத்து வந்தார். இப்படியான சூழலில், நான் திரைப்படம் அவருக்கு கதாநாயகனாகும் வாய்ப்பை கொடுத்தது.
முழுக்க முழுக்க திரில்லர் ஜானரில் வெளியான இந்த திரைப்படம், ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இதன் பிறகு நடிப்பு பக்கம் திரும்பி அவர், தற்போது வரை அதில் கவனம் செலுத்தி வருகிறார். இதில் பிச்சைக்காரன் திரைப்படம், விஜய் ஆண்டனிக்கு நடிகனாக மிகப்பெரிய இடத்தை கொடுத்தது.
தமிழில் மட்டுமல்லாமல் தெலுங்கிலும் டப் செய்யப்பட்ட இந்த திரைப்படம், கோடிகளை வாரி இறைக்க நாயகன் அந்தஸ்தை பெற்றார் விஜய் ஆண்டனி. இதனைத் தொடர்ந்து அவர் நடித்த படங்களில் பெரும்பாலானவை தோல்வியையே சந்தித்தனர். சமீபத்தில் அவர் நடித்து வெளியான, பிச்சைக்காரன் படத்தின் இரண்டாம் பாகம் வசூல் ரீதியாக வெற்றி பெற்றது.
இப்படியான சூழலில், கடைசியாக அவர் ரத்தம் திரைப்படத்தின் நடித்திருந்தார். தமிழ் படத்தின் இயக்குனர் சி எஸ் அமுதன் இதனை இயக்கினார். ஆனால், இந்த திரைப்படம் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை. இப்படியான சூழலில் தற்போது அவர், இயக்குனர் அருண் பிரபுவுடன் இணைந்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
அருண் பிரபு இதற்கு முன்னதாக அருவி திரைப்படத்தை இயக்கியிருந்தார். தமிழ் சினிமாவில் வித்தியாசமான கதைகளத்தில் எடுக்கப்பட்ட இந்த திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. தொடர்ந்து வாழ் என்னும் திரைப்படத்தை அவர் இயக்கியிருந்தார். சிவகார்த்திகேயன் தயாரிப்பில் இந்த திரைப்படம் உருவானது. இதில் பிரதீப் ஆண்டனி கதாநாயகனாக நடித்திருந்தார். இந்த படம் சுமாரான விமர்சனத்தை பெற தற்போது விஜய் ஆண்டனி உடன் அருண் பிரபு இணைந்து இருக்கிறார். இது திரைப்படத்தை விஜய் ஆண்டனியை தயாரிப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.





